சினிமா

“நீ என்ன அவ்ளோ பெரிய சம்பவக்காரனா..?” பொங்கல் ரேஸுக்கு ரெடியாகும் விக்ரமின் வீர தீர சூரன்!

சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“நீ என்ன அவ்ளோ பெரிய சம்பவக்காரனா..?” பொங்கல் ரேஸுக்கு ரெடியாகும் விக்ரமின் வீர தீர சூரன்!
வீர தீர சூரன் கிளிம்ப்ஸ் வீடியோ

சென்னை: தங்கலானை தொடர்ந்து சீயான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் வீர தீர சூரன். சித்தா பட பிரபலம் சு அருண்குமார் இயக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. ஆனால், முதலில் வீர தீர சூரன் இரண்டாம் பாகம் தான் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. விக்ரமுடன் எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். 

ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கிராமத்துப் பின்னணியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் சீயான் விக்ரம். இதனால் அவர் Rugged பாய் கெட்டப்புக்கு மாறியுள்ளார். வீர தீர சூரன் படத்தின் அபிஸியல் அப்டேட்டை கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியிட்டது படக்குழு. அப்போதே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக இருந்தது. அதன்பின்னர் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவும் வீர தீர சூரன் படத்திற்கு செம ஹைப் கொடுத்தது. 

இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக மேலும் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது வீர தீர சூரன் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரைட்ஸை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக வெளியான இந்த கிளிம்ப்ஸில் விக்ரம் தெறி மாஸ் காட்டியுள்ளார். “நீ என்ன அவ்ளோ பெரிய சம்பவக்காரனா... அப்படி எத்தன சம்பவம் டா பண்ணிருக்க..” என போலீஸார் கேட்க, அதற்கு சீயான் விக்ரம் சைலண்டாக தனது விரல்களை மட்டும் நீட்டி பதில் சொல்கிறார். சீயானுக்கு வசனமே இல்லையென்றாலும், அவரது லுக்கும் கெத்தும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் மொமண்டாக அமைந்துள்ளது.  

முக்கியமாக இந்தப் படத்தில், சீயான் விக்ரம், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு இணைந்து நடித்துள்ள 18 நிமிட சிங்கிள் டேக் காட்சி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வீர தீர சூரன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் குட் பேட் அக்லி, ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன. இந்த லிஸ்ட்டில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரனும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.