தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 28) தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 28) ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

29.08.2024 மற்றும் 30.08.2024: தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

31.08.2024  முதல்  03.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு: 

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27  - 28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  27  - 28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

தமிழக கடலோரப்பகுதிகள்: 

28.08.2024 முதல் 01.09.2024 வரை:  மன்னார்   வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் படிக்க: துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டுப் போங்க... நடிகை ஊர்வசி அட்வைஸ்

வங்கக்கடல் பகுதிகள்:

28.08.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.