Dhanush: தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு... அப்போ அதுதான் உண்மையா?

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில், இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாதது ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 19, 2024 - 18:12
Oct 19, 2024 - 18:42
 0
Dhanush: தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு... அப்போ அதுதான் உண்மையா?
மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாத தனுஷ் - ஐஸ்வர்யா

சென்னை: துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷ், தற்போது ஹாலிவுட் வரை பிரபலமாகிவிட்டார். ஒரேநேரத்தில் தமிழ், இந்தி, ஹாலிவுட் என பல படங்களில் நடித்து வரும் தனுஷ், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை படங்களை இயக்கியும் வருகிறார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த தனுஷ், தற்போது சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். சினிமாவில் உச்சம் தொடும் முன்பே, ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார் தனுஷ். அதன்படி இருவரது திருமணம் 2004ம் ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது.   

திருமணத்திற்குப் பின்னர் தனுஷின் கரியர் உச்சம் சென்றது, அதற்கு சப்போர்ட்டாக இருந்தது அவரது மனைவி ஐஸ்வர்யா தான். இதனை தனுஷே சில இடங்களில் மனம் திறந்து கூறியிருந்தார். மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு, யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் திருமண வாழ்க்கையில் இருந்து விலக தனுஷும் ஐஸ்வர்யாவும் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு விவாகரத்து செய்வதாக இருவரும் அவர்களது சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக சொல்லப்பட்டாலும், அதுபற்றி அவர்கள் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.   

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்ற பின்னரும், தங்களது மகன்களுக்காக அவர்களது பள்ளிக்கூட நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்று வந்தனர். அதேநேரம் மீண்டும் இருவரையும் இணைக்கும் வேலைகளில் அவர்களது குடும்பத்தினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகின. இதனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் சீக்கிரமே இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடி விவகாரத்து கோரிய வழக்கில், தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தனர்.

கடந்த 7ம் தேதி இருவரும் சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அன்று அவர்கள் ஆஜராகவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து குடும்ப நல நீதிமன்றம். இதனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் இன்று ஆஜர் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் நீதிமன்றம் செல்லவில்லை. இருவரும் மீண்டும் ஆஜராகததால், இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவகாரத்து கோரிய வழக்கில் தனுஷ், ஐஸ்வர்யா இரண்டாவது முறையாக ஆஜராகவில்லை என்பதால், அவர்களது முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் – ஐஸ்வர்யா இருவரிடமும் ரஜினியே விவாகரத்து வேண்டாம் என்பது பற்றி பேசியதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் வெளியான ரஜினியின் வேட்டையன் படத்தை முதல் ஆளாக தியேட்டரில் சென்று பார்த்து ரசித்தார் தனுஷ். அவர் சென்ற சென்னை ரோகிணி திரையரங்கில், ஐஸ்வர்யா தனது மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் வேட்டையன் படம் பார்த்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனால் தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணையலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow