தமிழ்நாடு

பாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரம்..!

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று, நாடு முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுவதும்  பாதுகாப்பு தீவிரம்..!
பாபர் மசூதி இடிப்பு தினம்.. நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரம்..!

நாடு முழுவதும் டிசம்பர் 6-ஆம் தேதியான இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  மோப்ப நாய்களுடன் சோதனைகள் நடைபெற்றது. பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்துக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளின் உடைமைகள்  தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று பல முஸ்லீம் குடியிருப்புகள் சூறையாடப்பட்டன, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது, இதன் விளைவாக சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டனர். அந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி அயோத்தி உள்பட நாடு முழுவதும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்படுகளை ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரயில் நிலையத்தில் உள்ள அரசு இரும்பு பாதை காவல் நிலையத்தையும் ஆய்வு செய்து குற்ற வழக்குகள் குறித்த காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து ரயில்வே டிஜிபி வன்னிய பெருமாள் செய்தியாளர்களை சந்தித்து தகவல் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

அரசு இருப்புப்பாதை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகாளில் நடக்கும் குற்றங்களில் வழக்கு பதிவு செய்து தகுந்த சட்ட நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களையும் இருப்புப்பாதை சொத்துக்களையும் பாதுகாத்து வருகிறோம். 

கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் முதல் நேற்று வரை போதைப் பொருள் பயன்பாடு மற்றும் தடை சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 56.7 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதே காலகட்டத்தில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் முதல் நேற்று வர இரயில்கள் மூலமாக வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட இருந்த சுமார் 3025 கிலோ அரிசி (PDS Rice) பரிமுதல் செய்யப்பட்டு 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் கிறிஸ்துவ ஆலயங்கள் என அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.