தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ரவுடி நாகேந்திரன் புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.. !

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ரவுடி நாகேந்திரனை புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக, சிறைத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ரவுடி நாகேந்திரன் புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.. !
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ரவுடி நாகேந்திரன் புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.. !

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யபட்ட முதல் குற்றவாளியான ரெளடி நாகேந்திரனை வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி வெட்டி படுகொலை சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 28 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதில் திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  இவ்வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஐந்தாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில் இன்று ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட 27 நபர்களையும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு ஆஜர்படுத்தபட்டனர்.

குற்றம்சாட்டபட்ட நாகேந்திரன் கல்லீரல் நோயால் பாதிக்கபட்டுள்ளதாகவும், நீண்ட நேரம் பயனம் செய்யமுடியாது என்பதால், வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றவேண்டும் எனவும், சிறையில் முறையான சிகிச்சை வழங்கவில்லை என நாகேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜ் ஆஜராகி, இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

வழக்கில் முதல் குற்றவாளியான ரெளடி நாகேந்திரன், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது எனவும், தனக்காக ஆஜராக வரும் வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவாதாக நீதிபதியிடம் முறையீட்டார்.

5 ஆயிரம் பக்கத்திற்கும் அதிகமாக குற்றப்பத்திரிக்கை இருப்பதால் டிஜிட்டல் முறையில் ஆவணங்களை வழங்க வேண்டும் என குற்றம்சாட்டபட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு முறையீட்டையும் கேட்ட நீதிபதி அனைவருக்கும் வாதட வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ள குற்றம்சாட்டபட்டவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், நாகேந்திரனை புழல் சிறைக்கு மாற்றுவது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 12ம் தேதி தள்ளிவைத்தார்.