சினிமா

Pushpa 2 ReleaseDate: மீண்டும் புஷ்பா 2 ரிலீஸ் தேதியில் மாற்றம்... அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஷாக்கிங்!

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் மாற்றியுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி குறித்தும் அப்டேட் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

Pushpa 2 ReleaseDate: மீண்டும் புஷ்பா 2 ரிலீஸ் தேதியில் மாற்றம்... அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஷாக்கிங்!
புஷ்பா 2 ரிலீஸ் தேதி மாற்றம்

சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த புஷ்பா திரைப்படம் 2021 டிசம்பர் இறுதியில் வெளியானது. அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. செம்மரக் கடத்தலை பின்னணியாக வைத்து உருவான புஷ்பா படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அல்லு அர்ஜுன் ஆக்ஷனில் மாஸ் காட்ட, தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிஜிஎம், இயக்குநர் சுகுமாரின் மேக்கிங் என படம் ஒட்டுமொத்தமாக ரசிகர்களை என்டர்டெயின் செய்தது. இதனால் புஷ்பா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

புஷ்பா வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கியது படக்குழு. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும் புஷ்பா 2, இந்தாண்டு ஆக.15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், ஷூட்டிங் முடியாததால் டிசம்பர் 6ம் தேதிக்கு புஷ்பா 2 ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் புஷ்பா 2 ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதாவது, டிச 6ம் தேதி வெளியாகவிருந்த புஷ்பா 2, தற்போது ஒருநாள் முன்னதாக டிச.5ம் தேதியே ரிலீஸாகிறது. இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 

புஷ்பா 2வில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், ஜெகதீஷ் பிரதீப் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்டன. இதன் தொடர்ச்சியாக விரைவில் புஷ்பா 2 டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் தரமான சம்பவம் செய்து வருகிறது புஷ்பா 2. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் தியேட்டர் ரைட்ஸ் மட்டுமே 600 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் புஷ்பா 2ம் பாகம், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டும் நடந்துவிட்டால், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கல்கி படங்களுக்குப் பின்னர் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த தெலுங்கு படம் என்ற பெருமை புஷ்பா 2க்கு கிடைக்கும். அதேபோல், பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் வரிசையில், அல்லு அர்ஜுனும் 1000 கோடி வசூலித்த ஹீரோ என கெத்து காட்ட வாய்ப்புள்ளது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் புஷ்பா 3ம் பாகத்தின் அப்டேட் கொடுத்து ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் சுகுமார்.

புஷ்பா 2 க்ளைமேக்ஸில், இப்படத்தின் 3ம் பாகத்திற்கான லீட் இருக்கும் எனக் கூறியுள்ள சுகுமார், கண்டிப்பாக மூன்றாம் பாகம் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் புஷ்பா 2ம் பாகத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. புஷ்பா 2 ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.