Priyanka Mohan: திடீரென சரிந்து விழுந்த மேடை... பிரியங்கா மோகன் கிரேட் எஸ்கேப்... வைரலாகும் வீடியோ!

கோலிவுட், டோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Oct 3, 2024 - 23:06
 0
Priyanka Mohan: திடீரென சரிந்து விழுந்த மேடை... பிரியங்கா மோகன் கிரேட் எஸ்கேப்... வைரலாகும் வீடியோ!
விபத்தில் சிக்கிய பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மூலம் கோலிவுட் ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியங்கா மோகன். முன்னதாக ஓந்த் கதே ஹெல்லா (Ondh Kathe Hella) என்ற கன்னட திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருந்தார் பிரியங்கா மோகன். கன்னடம், தெலுங்கில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த பிரியங்கா மோகனை, இயக்குநர் நெல்சன் தான் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தினார். அதன்படி டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரியான பிரியங்கா மோகன், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவா ஜோடியாக டான், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் ஜோடி என கோலிவுட்டை கலங்கடித்து வருகிறார். 

தெலுங்கில் நானி ஹீரோவாக நடித்த சரிபோதா சனிவாரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியங்கா மோகன். அதேபோல் ஜெயம் ரவி ஜோடியாக பிரதர் திரைப்படத்திலும், தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் கேமியோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடலில் பிரியங்கா மோகனின் க்யூட் டான்ஸ் ரசிகர்களுக்கு செம வைப் கொடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ பிரியங்கா மோகன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.  

தெலங்கானா மாநிலத்தின் தோரூர் பகுதியில் அமைந்துள்ள ஷாப்பில் மால் ஒன்றின் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் பிரியங்கா மோகன். அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர். இதனால் உற்சாகமான பிரியங்கா மோகன், ரசிகர்கள் முன் ரொம்பவே மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மேடை சரிந்து விழுந்தது. அப்போது அந்த மேடையில் நின்றுகொண்டிருந்த பிரியங்கா மோகன் உட்பட 10க்கும் மேற்பட்டோர் ஒருவர் மீது ஒருவராக விழுந்தனர். 

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிரியங்கா மோகன், தோரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறிய விபத்தில் சிக்கினேன். இதில் சிறியதாக காயம் ஏற்பட்டுள்ளது, அதேநேரம் நல்வாய்ப்பாக பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் என்னுடன் இந்த விபத்தில் சிக்கிய ஒருசிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சீக்கிரமே குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன், நான் விபத்தில் சிக்கியதை அறிந்து என்னிடம் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றிகள் என ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில், பிரியங்கா மோகன் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சில தினங்களுக்கு முன்னர், தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை பிரியங்கா மோகன் வார்னிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ரசிகர் தன்னை வீடு வரை ஃபாலோ செய்து வந்ததால் கடுப்பான பிரியங்கா மோகன், பொது இடத்திலேயே எச்சரித்து அனுப்பினார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow