இரவு தூக்கமில்லை.. உணவில்லை.. சிறைக்குள் தவித்த நடிகை கஸ்தூரி
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு மக்களை இழிவாக பேசியதாக நடிகை கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று மதியம் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்கள் விசாரணை கைதிகள் அறையில் கைதிகளோடு கைதிளாக அடைக்கப்பட்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியம் சிறைக்குள் பிரியாணி சமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடிகை கஸ்தூரி எதுவும் சாப்பிடவில்லை என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் இரவு தூங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நேற்றிரவும், இன்று காலையும் இட்லி, உப்புமா உள்ளிட்டவைகள் உணவாக வழங்கப்பட்ட நிலையில், நடிகை கஸ்தூரி சிறையில் வழங்கப்படும் உணவை சரியாக சாப்பிடவில்லை என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதனையடுத்து, சிறைக்குள் முதல் வகுப்பு கோரி நீதிமன்ற அவர் நாட உள்ளார். நேற்று எழும்பூர் பெருநகர குற்றவியல் 5வது நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரியை ஆஜர்படுத்திய போதே ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன் எழும்பூர் பெருநகர குற்றவியல் 5 வது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நாளை மறுநாள் (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.
What's Your Reaction?