கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் பதுங்கிய கஸ்தூரி.. சிக்கியது எப்படி? அதிர்ச்சி தகவல்கள்
காவல் துறையினர் தன்னை கைது செய்ய வந்ததை அறிந்த நடிகை கஸ்தூரி வீட்டிற்குள்ளேயே பதுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய தெலுங்கு சம்மேளணம் அமைப்பினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் நடிகை கஸ்தூரி மீது இரு பிரிவினரிடையே கலகத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அளிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவானதால் இரண்டு தனிப் படைகள் அமைத்து நடிகை கஸ்தூரியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தாக்கல் செய்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் நடிகை கஸ்தூரியை பிடிக்க தனிப்படைகள் ஹைதராபாத் மற்றும் ஆந்திராவில் முகாமிட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று ஹைதராபாத் புப்பல்குடா என்ற இடத்தில் பதுங்கி இருந்தபோது நடிகை கஸ்தூரி போலீசார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் (ஹரி) என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்தபோது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே தலைமறைவாக இருந்த கஸ்தூரியை, கைது செய்ய காவல்துறை சென்றபோது கதவை நீண்ட நேரம் திறக்காமல் உள்ளே மறைந்திருந்த கஸ்தூரியை, ஹைதராபாத் போலீஸ் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விடுவோம் என காவல்துறை கூறிய பின்னர் கஸ்தூரி கதவை திறந்து வெளியே வந்ததாகவும் அதன் பின்னர் காவல்துறை கைது செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்தவுடன் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் ஹரி என்பவரின் செல்போன் என்னை பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
ஹைதராபாத்தில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே கஸ்தூரி பதுங்கி இருந்து தயாரிப்பாளரின் செல்போன் எண்ணை பயன்படுத்தி மற்ற நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பதனை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
What's Your Reaction?