சினிமா

Thalapathy69: தவெக மாநாட்டுக்கு முன் தளபதி 69 பூஜை... படப்பிடிப்புக்கு ரெடியான விஜய்... செம அப்டேட்!

விஜய்யின் கடைசி படத்தை H வினோத் இயக்கவுள்ள, இதன் பூஜை, படப்பிடிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy69: தவெக மாநாட்டுக்கு முன் தளபதி 69 பூஜை... படப்பிடிப்புக்கு ரெடியான விஜய்... செம அப்டேட்!
விஜய்யின் தளபதி 69 அப்டேட்

சென்னை: விஜய் நடிப்பில் இந்த மாதம் வெளியான கோட் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் இதுவரை 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். இந்நிலையில், கோட் மூவி தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்-ஐ தொடந்து விஜய் நடிக்கவுள்ள படத்தை H வினோத் இயக்குகிறார். விஜய்யின் கடைசி படமாக உருவாகும் இதற்கு தற்காலிகமாக ‘தளபதி 69’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ஒரிஜினல் டைட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

விஜய் இனிமேல் அரசியலில் களமிறங்கவுள்ளதால், தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துவிட்டார். தற்போதைக்கு இதுதான் விஜய்யின் உறுதியான முடிவாக இருந்தாலும், 2026 தேர்தலுக்குப் பின்னர் முடிவுகள் மாறலாம் என சொல்லப்படுகிறது. விஜய் - H வினோத் கூட்டணியில் உருவாகும் தளபதி 69 படத்தை, கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகியுள்ளார். இதுதவிர விஜய்யுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் என்பது குறித்து அபிஸியலாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால், விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய் – பூஜா ஹெக்டே கூட்டணி ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தது. இப்போது மீண்டும் தளபதி 69 படத்தில் விஜய் – பூஜா ஹெக்டே இணைந்து நடிப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தப் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் கமிட்டாகியுள்ளாராம். தமிழில் சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக நடித்துள்ள பாபி தியோல், தற்போது விஜய்க்கும் வில்லனாகிறார். இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனத் தெரிகிறது. 

இந்நிலையில், தளபதி 69 படத்தின் பூஜை அக்டோபர் 4ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு அடுத்த நாள் (அக்.5) படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், முதல் ஷெட்யூலில் பாடல் காட்சியை படமாக்கவுள்ளதாகவும், இந்தப் படப்பிடிப்பு இது இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் தவெக மாநாட்டில் பங்கேற்கவுள்ள விஜய், அது முடிந்த பின்னர் மீண்டும் தளபதி 69 படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாராம். தளபதி 69 பூஜையில் விஜய், இயக்குநர் வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

தளபதி 69 அபிஸியல் அப்டேட் வெளியாகும் போதே, இந்தப் படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. இதனால் அடுத்தாண்டு தீபாவளி, தளபதி விஜய்யின் தீபாவளியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.