Bigg Boss Season 8 Tamil : தொடங்கியது பிக் பாஸ் சீசன் 8... போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ... ஆனா விஜய் சேதுபதி சம்பளம்?

Bigg Boss Season 8 Tamil Contestants List : பிக் பாஸ் சீசன் 8 போட்டி வரும் 6ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 4, 2024 - 23:19
Oct 4, 2024 - 23:57
 0
Bigg Boss Season 8 Tamil : தொடங்கியது பிக் பாஸ் சீசன் 8... போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ... ஆனா விஜய் சேதுபதி சம்பளம்?
பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் விபரம்

Bigg Boss Season 8 Tamil Contestants List : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடந்து முடிந்த பிக் பாஸின் 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். திடீரென அவர் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதால், இந்தாண்டு முதல் நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் ஹோஸ்ட்டாக இணைந்துள்ளார். இதுபற்றிய அபிஸியல் அறிவிப்புகளுடன், ப்ரோமோவும் சமீபத்தில் வெளியானது. மேலும் அக்.6ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 8(Bigg Boss Season 8 Tamil) தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்றே பிக் பாஸ் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு சீசனின் தொடக்கமும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டமாக இருக்கும். அதேபோல், பிக் பாஸ் வீட்டை கமல்ஹாசன் சுற்றிக் காட்டி, போட்டியின் விதிமுறைகளை கூறுவார். அதேபோல், இந்த முறையும் பிக் பாஸ் தொடக்க நிகழ்ச்சி கலைக்கட்ட உள்ளது. அதோடு விஜய் சேதுபதியும் முதன்முறையாக பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கவுள்ளார். கமலுக்குப் பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி(Vijay Sethupathi), ரசிகர்களை கவர்ந்திழுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 8-ஐ(Bigg Boss Season 8 Tamil) தொகுத்து வழங்க, விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 15 முதல் 18 கோடி ரூபாய் வரை விஜய் சேதுபதிக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். பிக் பாஸ் போட்டி மொத்தமாக 100 நாட்கள் நடைபெறும் சூழலில், விஜய் சேதுபதி 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் விஜய் சேதுபதிக்கு 15 முதல் 18 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படவுள்ளதாம். முன்னதாக விஜய் சேதுபதிக்கு மிகப் பெரிய தொகை சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது ஒருபக்கம் இருக்க பிக் பாஸ் சீசன் 8ல்(Bigg Boss Season 8 Tamil Contestants List) பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, தயாரிப்பாளர் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியாகவிருப்பதாக சொல்லப்படுகிறது. சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்ட பின்னர், ரவீந்தர் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். இப்போது பிக் பாஸ் வீட்டிலும் இவர் ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கவுண்டம்பாளையம் பட பிரபலம் ரஞ்சித்தும், பிக் பாஸ் சீசன் 8ல் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இவர்களுடன் சீரியல் நடிகர் அர்னவ், அருண், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ‘மக்காமிஷி’ பாடல் புகழ் அனீஸ் என்ற பால் டப்பா, மானாட மயிலாட பிரபலம் கோகுல் நாத், விஜே விஷால் ஆகியோரும் பங்கேற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், சர்பட்டா பரம்பரை பிரபலம் சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி ஆங்கர் ஜாக்குலின், சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, மகராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சச்சனா, டான்ஸர் சுனிதா கோகோய், அன்ஷிதா, தர்ஷா குப்தா, ஷாலின் சோயா, செளர்ந்தர்யா நஞ்சுண்டன், நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனவும் பிக் பாஸ் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow