Vijay Sethupathi: 50-வது படம் மெஹா ஹிட்... இயக்குநருக்கு BMW கார்... மகாராஜா மோடில் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை பரிசாக கொடுத்துள்ளது படக்குழு.

Oct 7, 2024 - 21:29
Oct 7, 2024 - 21:35
 0
Vijay Sethupathi: 50-வது படம் மெஹா ஹிட்... இயக்குநருக்கு BMW கார்... மகாராஜா மோடில் விஜய் சேதுபதி!
மகாராஜா இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW கார் பரிசு

சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவான மகாராஜா, ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விதார்த், பாரதிராஜா நடித்த குரங்கு பொம்மை படம் மூலம் பிரபலமான நித்திலன் சாமிநாதன், மகாராஜாவையும் இயக்கினார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியான போது பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால், தியேட்டரில் ரிலீஸான முதல் நாளிலேயே மகாராஜா படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

விஜய் சேதுபதியின் நடிப்பை விடவும், கதை, திரைக்கதை, மேக்கிங் ஆகியவை மகாராஜா படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ரொம்ப முக்கியமாக மகாராஜா படத்தின் திரைக்கதை தாறுமாறாக இருந்தது. படத்தின் எந்த காட்சியிலும் அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்பதை கணிக்க முடியாதபடி செம த்ரில்லிங்காக இயக்கியிருந்தார் நித்திலன் சாமிநாதன். விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது மகாராஜா. அதேபோல், திரையரங்குகளிலும் இந்தப் படம் 50 நாட்களை கடந்து ஓடியது. 

பல பெரிய ஹீரோக்களுக்கு அவர்களது 50வது, 100வது படங்கள் தோல்வியடைந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு மகாராஜா மாஸ் ஹிட் கொடுத்தது. ஒட்டுமொத்தமாக எல்லா விதங்களிலும் மகாராஜா ஹிட் அடிக்க, அதன் இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு இப்போது ஜாக்பாட் அடித்துள்ளது. அதன்படி, நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை பரிசளித்துள்ளது மகாராஜா படக்குழு. Passion Studios சுதன், ஜெகதீஷ் ஆகியோருடன் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து BMW காரை நித்திலன் சாமிநாதனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ள இந்த போட்டோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் புகைப்படத்தை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள நித்திலன் சாமிநாதன், தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து நித்திலன் சாமிநாதனுக்கு திரை பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான மகாராஜா படம், ஓடிடி ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தாண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகம் பார்வைகளை கடந்த இந்திய சினிமாவாக மகாராஜா சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மகாராஜாவை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் மகாராணி என்ற படத்தை இயக்கவுள்ளார் நித்திலன் சாமிநாதன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow