சினிமா

"வீரமும் காதலும்.." விடுதலை 2 விஜய் சேதுபதி ஃபர்ஸ்ட் லுக்... வெற்றிமாறன் சம்பவம் லோடிங்!

Viduthalai 2 First Look Poster : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை 2ம் பாகத்தில் இருந்து, விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Viduthalai 2 First Look Poster

Viduthalai 2 First Look Poster : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்த விடுதலை திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. கதையின் நாயகனாக சூரியும், வாத்தியார் என்ற லீடிங் கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து, மறைந்த பெருமாள் வாத்தியாரின் பயோபிக் மூவியாக வெளியாகியிருந்தது விடுதலை. இப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருந்தாலும், விமர்சன ரீதியாகவும் சில சிக்கல்களை சந்தித்தது.   

இதனால் விடுதலை 2ம் பாகத்தின் சில போர்ஷன்களை மீண்டும் படமாக்கினார் வெற்றிமாறன். இல்லையென்றால் இந்தப் படம் கடந்தாண்டு இறுதியிலேயே ரிலீஸாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விடுதலை படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் மொத்தமாகவே முடித்திருந்தார் வெற்றிமாறன். இந்நிலையில், விடுதலை 2ம் பாகத்தில் இருந்து இன்று முதல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிலும் ஒன்றுக்கு இரண்டு போஸ்டர்களை ரிலீஸ் செய்து விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு செம ஹைப் கொடுத்துள்ளது. 

காதலும் வீரமும் என்ற கேப்ஷனில் வெளியான முதல் போஸ்டரில், விஜய் சேதுபதியும் மஞ்சு வாரியரும் வின்டேஜ் லுக்கில் க்யூட்டாக உள்ளனர். இன்னொரு போஸ்டரில் கையில் அரிவாளுடன் விஜய் சேதுபதி படுமிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இதுதான் ரியல் வாத்தியார் கெட்டப் போல உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல் விடுதலை 2ம் பாகத்தில் விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது. அதில், விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியரும், அவர்களது மகனாக கென் கருணாஸும் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.      

விஜய் சேதுபதியின் போஸ்டரோடு, விடுதலை 2ம் பாகத்தின் படப்பிடிப்பு பற்றியும் படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி, விடுதலை 2 படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல் இளையராஜா இசையில் விடுதலை 2 படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவும் வாய்ப்புள்ளது. விடுதலை 2ம் பாகத்தில் மஞ்சு வாரியர் மட்டுமின்றி அனுராக் காஷ்யப், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். அதாவது இவர்கள் யாரும் விடுதலை முதல் பாகத்தில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை 2ம் பாகம் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டதால், அடுத்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க வெற்றிமாறன் ரெடியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சூர்யா, அமீர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள வாடிவாசல் ஷூட்டிங் கடந்தாண்டே தொடங்கவிருந்தது. ஆனால், விடுதலை 2ம் பாகத்துக்காக வாடிவாசல் படப்பிடிப்பை ஒத்தி வைத்தார் வெற்றிமாறன். சூர்யாவும் அதற்குள்ளாக கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்துவிடலாம் என முடிவு செய்துவிட்டார். அதன்படி சூர்யா 44 படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. எனவே சீக்கிரமே வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.