அமரன் மேடையில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு செக்... சிவகார்த்திகேயன் பொழைக்க தெரிஞ்ச ஆளு தான்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. அதில், விஜய், அஜித் பற்றி சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி வருகிறது.

Oct 19, 2024 - 17:21
 0
அமரன் மேடையில் விஜய், அஜித் ரசிகர்களுக்கு செக்... சிவகார்த்திகேயன் பொழைக்க தெரிஞ்ச ஆளு தான்!
அஜித், விஜய்யை விட்டுக் கொடுக்காத சிவகார்த்திகேயன்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகவுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள அமரன், மறைந்த மேஜர் முகுந்தின் பயோபிக் மூவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. 

இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட அமரன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இயக்குநர்கள் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தளபதி விஜய், தல அஜித் இருவர் பற்றியும் சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி வருகிறது. கடந்த மாதம் வெளியான விஜய்யின் கோட் படத்தில், கேமியோவாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு விஜய் துப்பாக்கி கொடுத்த சீன் பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

அதாவது, தளபதி விஜய் இனிமேல் அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதால், சினிமாவில் அவரது இடம் சிவகார்த்திகேயனுக்கு தான் என்பதாக இந்த சீன் உருவாகியிருந்தது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் செல்லும் இடமெல்லாம் ‘துப்பாக்கி வெயிட் எப்படி இருக்கு’ என தொடர்ந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. சிவாவும் அதற்கு “துப்பாக்கியோட வெயிட் அத ஹேண்டில் பண்றதுல தான் இருக்கு” என தக் லைஃப் மொமண்டாக பதில் கொடுத்திருந்தார். அதேபோல், கோட் படத்தில் கேமியோவாக நடித்ததற்காக, சிவகார்த்திகேயனுக்கு விஜய் வாட்ச் ஒன்றை கிஃப்ட்டாக கொடுத்திருந்தார்.

விஜய் கொடுத்த துப்பாக்கி, வாட்ச் இந்த இரண்டில் எது உங்கள் பெஸ்ட் சாய்ஸ் என அமரன் விழாவில் சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது. அதற்கு இந்த இரண்டையும் விட விஜய்யின் அன்பு தான் வெயிட் என பதில் கூறி, விஜய் ரசிகர்களையே சிலிர்க்க வைத்தார் சிவா. விஜய் பற்றி சிவகார்த்திகேயன் பேசிய இந்த வீடியோ ஒருபக்கம் வைரலாகிக் கொண்டிருக்க, அதே மேடையில் அல்டிமேட் ஸ்டார் அஜித்தையும் விட்டுக்கொடுக்காமல் பேசியுள்ளார்.

அதில், நண்பர் ஒருத்தரோட தீபாவளி Get together நிகழ்சிக்கு சென்றிருந்தேன். கதவை திறந்து பார்த்தால் அந்தப் பக்கம் அஜித் சார் இருந்தார். உடனே எனது கைகளை குலுக்கி 'Welcome to Big League’ என்றார். எனக்கு எதுவும் புரியாமல், மீண்டும் 'சார்' என சொல்லி அவரை பார்த்து நின்றேன். அதற்கு அஜித் சார், 'உங்க Growth பார்த்து சில பேரு Insecured-ஆ Feel பண்ண ஆரம்பிச்சுடாங்க-ல அப்போவே You Entered into Big League Man’ என சொன்னதை, அமரன் மேடையில் மனம் திறந்தார். சிவகார்த்திகேயனின் இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யையும் அஜித்தையும் ஒரே மேடையில் புகழ்ந்து அவரது ரசிகர்களை கூல் செய்துவிட்டார் சிவகார்த்திகேயன். இதனால் அமரன் படத்துக்கு இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கும், அதுமட்டுமில்லாமல் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பு என்பதால், கமல் ரசிகர்களும் விட்டு கொடுக்கமாட்டார்கள். தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரனுடன் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர், கவின் நடிப்பில் பிளடி பெக்கர் படங்களும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow