BloodyBeggar: ரெட்ரோ லுக்கில் கவின்... ரசிகர்களுக்கு வைப் கொடுக்கும் பிளடி பெக்கர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

கவின் ஹீரோவாக நடிக்கும் பிளடி பெக்கர் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Sep 13, 2024 - 21:14
 0
BloodyBeggar: ரெட்ரோ லுக்கில் கவின்... ரசிகர்களுக்கு வைப் கொடுக்கும் பிளடி பெக்கர் ஃபர்ஸ்ட் சிங்கிள்
பிளடி பெக்கர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

சென்னை: பிக் பாஸ் பிரபலம் கவின், இப்போது கோலிவுட் இளம் ஹீரோக்களில் முன்னணியில் உள்ளார். லிஃப்ட், டாடா, ஸ்டார் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த அவர், தற்போது பிளடி பெக்கர் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் இந்தப் படத்தை சிவபாலன் முத்துக்குமார் இயக்குகிறார். தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள பிளடி பெக்கர் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. ஜென் மார்ட்டின் இசையில் வெளியாகியுள்ள ‘நான் யாரு’ என்ற இந்தப் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிளடி பெக்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது கவின் லுக் ரொம்பவே வைரலானது. அசல் பிச்சைக்காரன் போல கெட்டப் போட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். பிளடி பெக்கர் என்ற டைட்டிலும் கவினின் லுக்கும் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அதேநேரம் பிளடி பெக்கர் பக்கா காமெடி ஜானர் மூவி என்றும், இது கவினுக்கு சூப்பரான கம்பேக் கொடுக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது பிளடி பெக்கர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

நான் யாரு பாடலில், கவினின் லுக், செட்டிங், மேக்கிங் அனைத்தும் ரெட்ரோ லுக்கில் செம கலர்ஃபுல்லாக உள்ளன. அதேபோல் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் ஜாலியாக வைப் செய்துள்ளனர். இப்பாடலின் முடிவில் கவின் கொடுத்துள்ள “இவரே நான் யாரு சொல்லவான்னு கேப்பாராம்... ஆனா கடைசிவர சொல்லமாட்டாராம்... பிச்சைக்கார பய” என்ற வாய்ஸ் ஓவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒட்டுமொத்தமாக பிளடி பெக்கர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கொடுத்துள்ளது.

தற்போது வெளியான பிளடி பெக்கர் படத்தின் முதல் பாடலுக்கான வரிகளை, லோகேஷ் கனகராஜ்ஜின் அசிஸ்டெண்ட் டைரக்டர் விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். ஹரி பிரசாத் ரமணி இப்பாடலை பாடியுள்ளார். அமரன், பிரதர்ஸ் படங்களுடன் தீபாவளிக்கு ரிலீஸாகும் பிளடி பெக்கர், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதுவரை முன்னணி ஹீரோக்களின் படங்களுடன் மோதாமல் இருந்த கவின், இப்போது சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி இருவருடன் போட்டியிடவுள்ளார். ஆகமொத்தம் இந்தாண்டு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு வெரைட்டியான ட்ரீட் காத்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow