சினிமா

Jayam Ravi: ”வாழு வாழ விடு... தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க..” உண்மையை சொன்ன ஜெயம் ரவி!

Actor Jayam Ravi About Aarti Divorce at Brother Audio Launch : ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வது குறித்து மனம் திறந்தார்.

Jayam Ravi: ”வாழு வாழ விடு... தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க..” உண்மையை சொன்ன ஜெயம் ரவி!
ஜெயம் ரவி

Actor Jayam Ravi About Aarti Divorce at Brother Audio Launch : ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக திரைக்கு வரவுள்ளது. சிவகார்த்திகேயனின் அமரன், கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் படங்களுக்குப் போட்டியாக பிரதரும் ரிலீஸாகிறது. ராஜேஷ் எம் இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், பூமிகா, நட்டி, சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹரிஷ் ஜெயராஜ் பிரதர் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், ராஜேஷ் எம், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிரதர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதேபோல், பிரதர் படத்தில் இடம்பெற்றுள்ள மகாமிஷி பாடலுக்கு ஜெயம் ரவியுடன் டான்ஸ் ஆடி அசத்தினார் ஹாரிஸ் ஜெயராஜ். ஜெயம் ரவியும் ஹாரிஸ் ஜெயராஜ்ஜும் கலக்கலாக டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே பிரதர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரியங்கா மோகன், பிரதர் படத்தில் பல திரை பிரபலங்களுடன் நடித்தது சந்தோசமாக உள்ளது. டாக்டர் படத்தில் நடித்ததைப் போல பிரதர் மூவியிலும் ஜாலியான கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த தீபாவளியை கொண்டாட பிரதர் சிறந்த திரைப்படமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

அதன்பின்னர் பேசிய ஹீரோ ஜெயம் ரவி, ரசிகர்கள் கொடுக்கும் எனர்ஜியில் தான் என் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. எனது முதல் படத்தில் என்ன எனர்ஜியை கொடுதார்களோ, அதே எனர்ஜியை கடைசி படம் வரை கொடுப்பார்கள் எனத் தெரியும். மக்களை சந்தோஷப்படுத்துவது தான் எனது வேலை. குழந்தை போல என்னை வழி நடத்துவது ஊடகம் தான். பிரதர் என்ற தலைப்பை நான் தான் செலக்ட் செய்தேன். அக்காவுக்கும் தம்பிக்குமான அழகான திரைக்கதை தான் பிரதர் படம் என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், பலமுறை கேட்டு ரசித்து உருவாக்கிய பாடல் தான் மக்காமசி. ரசிகர்கள் பாட்டுக்காக தான் திரைப்படத்திற்கே வருகிறார்கள். அதனால் மக்கா மசி பாடலை திட்டமிட்டு உருவாக்கினோம். பிரதர் அருமையான குடும்ப திரைப்படம் என்றார். 

இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வது குறித்து மனம் திறந்தார். “ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வாழு வாழ விடு. என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள். ஏதேதோ பெயரையெல்லாம் சொல்லி ஏதேதோ செய்கிறார்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கட்டும். கெனிஷா 600 மேடைகளில் பாடியவர், பல உயிர்களையும் காப்பாற்றியவர், அவர் ஒரு ஹீலர். வருங்காலத்தில் நானும் கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதனால் என்னையும் கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம். எங்களுடைய நோக்கம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான், அதை யாரும் கெடுக்காதீர்கள். அதை யாராலும் கெடுக்கவும் முடியாது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த அறிவிப்பு தனக்கு தெரியாது எனக் கூறியிருந்தார் அவரது மனைவி ஆர்த்தி. இதனால் தனது மகன்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் ஆர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கும் நேற்று விளக்கம் கொடுத்திருந்த ஜெயம் ரவி, எனது விவாகரத்து முடிவு ஏற்கனவே ஆர்த்திக்கு தெரியும் எனவும், இதுதொடர்பான உண்மைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் தெரியும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.