Sreejesh: கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட்... இந்திய ஹாக்கி அசோஷியேஷன் சர்ப்ரைஸ்!

இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் ஜெர்ஸி நம்பர் 16-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Aug 14, 2024 - 19:33
Aug 15, 2024 - 09:54
 0
Sreejesh: கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்க்கு லைஃப்டைம் செட்டில்மெண்ட்... இந்திய ஹாக்கி அசோஷியேஷன் சர்ப்ரைஸ்!
Sreejesh

சென்னை: இந்திய ஹாக்கி அணி ஒருகாலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கொடிகட்டி பறந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன்பின்னர் இந்திய ஹாக்கி அணியால் சர்வதேச அளவில் சாதிக்க முடியாமல் தடுமாறியது. இந்நிலையில், கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும், தற்போது நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கிலும், இந்திய ஹாக்கி அணி சாதனை படைத்தது. இந்த இரண்டிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று அசத்தியது. இந்த வெற்றியில் இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் பங்கு மிக முக்கியமானது.  

இந்திய ஹாக்கியின் தோனி என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீஜேஷ், தடுப்புச் சுவராக இருந்து பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். முக்கியமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்காக தனது உயிரையும் கொடுத்து விளையாடினார் ஸ்ரீஜேஷ். இதனால் அவரை இந்திய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ், 2006ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து தனது ஹாக்கி பயணத்தை தொடங்கி, இன்று உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். முன்னதாக பத்மஸ்ரீ, கேல்ரத்னா போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ள ஸ்ரீஜேஷுக்கு, இன்னொரு வாழ்நாள் கவுரவம் கிடைத்துள்ளது. 

அதாவது, ஸ்ரீஜேஷின் ஜெர்ஸி நம்பர் 16 ஆகும். இதனால் அவரை கவுரவப்படுத்தும் விதமாக இனிமேல் ஸ்ரீஜேஷின் ஜெர்ஸி நம்பர் 16க்கு ஓய்வு கொடுக்க இந்திய ஹாக்கி அசோஷியேஷன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள ஹாக்கி இந்தியா செயலாளர் போலா நாத் சிங், ஸ்ரீஜேஷ் ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக அவரது பணியை தொடர்வார் எனக் கூறியுள்ளார். மேலும், அவரை கவுரவிக்கும் வகையில் இந்திய ஹாக்கி சீனியர் அணியில் 16ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அதேநேரம் ஜூனியர் ஹாக்கியில் 16ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்கப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க - அர்ஷத் நதீம்க்கு உயரிய விருது வழங்கிய பாகிஸ்தான் பிரதமர்!

ஜூனியர் ஹாக்கி அணியில் அவரைப் போன்ற ஒருவர், ஸ்ரீஜேஷின் 16ம் எண் ஜெர்சியை அணிந்து வருவார் எனவும் போலா நாத் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக ஹாக்கியில் இருந்து ஓய்வுப் பெற்ற பின்னர், இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக ஸ்ரீஜேஷ் விருப்பம் தெரிவித்திருந்தார். 2036ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரை இந்தியா நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்திய சீனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக தான் இருக்க விரும்புவதாக ஸ்ரீஜேஷ் கூறியிருந்தார். கிட்டத்த 18 ஆண்டுகள் இந்திய ஹாக்கி அணியில் பல்வேறு பொறுப்புகளில் முக்கிய பங்காற்றியவர் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow