Air Show 2024 : வான் சாகச நிகழ்ச்சியில் சோகம்: 5 பேர் உயிரிழப்பு.. பலர் மருத்துவமனையில் அனுமதி
Air Show 2024 in Marina Beach : சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Air Show 2024 in Marina Beach : சென்னையில் நேற்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெரினாவில் சாகச நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில் நேற்று [06-10-24] ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை காண, லட்சக்கணக்கான மக்கள் சென்னை மெரினாவை நோக்கி சாரை சாரையாக படையெடுத்தனர். விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் வழக்கத்தை விட கூடுதலாக பேருந்துகளும் சிற்றுந்துகளும் இயக்கப்பட்டன.
விமான சாகசத்தில் பங்கேற்ற விமானங்கள் வானில் பறந்தபடியே எரிபொருள் நிரப்பியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்ததனர். இந்நிலையில், உலகளவில் அதிக மக்கள் பார்வையிட்ட விமான சாகச நிகழ்ச்சியாக சென்னை மெரினாவில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சி அமைந்தது. உலகில் அதிக மக்கள் பார்வையிட்ட சாகச நிகழ்ச்சி என்ற பதிவுக்காக ஹெலிகாப்டர் மூலம் பார்வையாளர்கள் படம் பிடிக்கப்பட்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமான சாகசத்தை கண்டு களிக்க பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், காலை முதலே வர தொடங்கியதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் வாகனங்களை நகர முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து சில ஏற்பட்டது.
வான்சாகச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த பிறகு சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக பொது மக்கள் சாரை சாரையாக வெளியேறினர். இதனால் அண்ணா சதுரங்கம் பேருந்து நிலையம், தேனாம்பேட்டை மெட்ரோ, ஓமந்தூரார் மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையம் என இப்பகுதியில் மக்கள் கூட்டமாக கூடியதால் போக்குவரத்து மற்றும் சாலையில் மக்கள் தேங்கி நிற்கும் நிலையில் இருந்தது.
குறிப்பாக விமானப்படை சார்பில் வான்சாகச நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மூன்று லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மெரினாவை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு சுமார் 3 மணி நேரமாக சென்னை மெரினா முதல் சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் இந்த போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது இதனால் பொதுமக்களும் விமான சாக நிகழ்ச்சியில் பார்வையிட வந்த பலரும் போக்குவரத்து இல்லாமல் தவித்த நிலையில் இருந்தது.
சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெயில் தாக்கம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில், பலரும் உள் நோயாளியாகவும், நீர்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் சிக்கியதில் 230 பேருக்கு லேசான மயக்கம், சோர்வு ஏற்பட்டது. இதில் 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நலமடைந்தனர். மேலும் 93 பேருக்கு மயக்கம் சோர்வு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், INS Adyar அருகே நின்று வான்சாகச நிகழ்ச்சி பார்த்துகொண்டிருந்த போது மயக்கமடைந்த, திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் (34) என்பவர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அதேபோல், குரோம்பேட்டை சேர்ந்த சீனிவாசன் (48), கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜான் (56) என்பவர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில் கர்பிணி பெண்ணை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் நகர முடியமல் தவித்தது. இதனையடுத்து, இளைஞர்கள் சிலர் ஆம்புலன்சில் இருந்து அந்த பெண்ணை ஸ்டெரச்சர் மூலம், நடந்தே தூக்கிச்சென்று கஸ்தூர பாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
What's Your Reaction?