#JUSTIN : தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்த நிலையில், ஆத்திரமடைந்த உறவினர்கள் பேருந்தை அடித்து நொறுக்கினர்.
கெலமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையின் பேருந்து, தொழிலாளர்களை அழைத்து சென்ற போது, நிலைத்தடுமாறி முன்னாள் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கட்டட தொழிலாளர்கள் குமார் மற்றும் கணேஷ் இருவரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அவர்களது உறவினர்கள் அந்நிறுவனத்தின் 6 பேருந்துகளை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
What's Your Reaction?