தி.நகரில் 4 நாட்களில் 16 கொள்ளை சம்பவம்... தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது..!
புழல் சிறையில் இருந்து வெளியே வந்த 4 நாட்களில் 16 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனை சென்னை மாம்பலம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை தி.நகர், சூளைமேடு, பெசன்ட் நகர், திருமங்கலம், ராஜமங்கலம், புழல் ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாட்களில் தொடர்ந்து வீட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நிழ்ந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னை தி.நகர் நியூ போங் சாலையில் வீட்டின் உடைத்து கொள்ளை நடந்தது. எல்லா கொள்ளை சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்து இருப்பதால் போலீசாருக்கு பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என சந்தேகம் மேலும் வலுத்தது.
சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்த நிலையில், கொள்ளையனின் அடையாளம் கண்டறியப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியைச் சேர்ந்த வினோத் குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாம்பலம் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி கைது செய்துள்ளனர். 27 வயதான விக்னேஷை, கைது செய்த போலீசார் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பைக், 6 லேப்டாப், 8 செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.
வினோத் குமார் மீது குமரன் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தவறான நண்பர்களின் பழக்கத்தால் கொள்ளையனாக மாறியதாக கைதான வினோத் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். கொள்ளையடித்த பணத்தில் குடிப்பது, உல்லாசமாக இருப்பது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டுவது, எவ்வளவு உயரமான சுவராக இருந்தாலும் ஏறி குதித்து திருடுவது ஆகியவற்றில் கைதேர்ந்தவர் வினோத் குமார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி தான் புழல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள வினோத் குமார் அதற்குள் 16 இடங்களில் கைவரிசை காட்டியிருப்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். பைக்கை திருடி விட்டு அதன்பிறகு ஹார்டுவேர் கடையில் சிறிய கடப்பாரை வாங்கிக்கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதை தனது ஸ்டைலாக வையுள்ளார் கொள்ளையன் வினோத் குமார்.
இந்த முறை போலீசிடம் சிக்காமல் இருக்க நினைத்ததாகவும், தி.நகர் பகுதியில் பைக்கில் சுற்றிய போது தனிப்படை போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டதாக கைதான வினோத் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை தி. நகர் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் மாம்பலம் போலீசார் கைது செய்துள்ள நிலையில், மற்ற 15 திருட்டு வழக்குகள் தொடர்பாகவும், போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று கொள்ளையன் வினோத் குமாரை கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?