சொன்னதை செய்வாரா விஜய்? ஒரு கண்ணை விட்டுவிடுவாரா?
மாவீரர் நாளுக்கும், பிரபாகரன் பிறந்தநாளுக்கும் அறிக்கை வெளியிட்டு நினைவு கூறுவாரா? என்ற கேள்வி அரசியலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளாக தமிழ் தேசியத்தையும் திராவிடத்தையும் மாநாட்டில் பிரகனப்படுத்தி இருந்தார் விஜய்.
இந்த நிலையில் தான் ஆண்டுதோறும் நவம்பர் 26 ஆம் தேதி போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்காக மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகின்றது அதேபோல நவம்பர் 27ஆம் தேதி பிரபாகரன் பிறந்த நாளும் வருகின்றது.
தமிழ் தேசிய கொள்கைகளை முன்ணிருத்தும் கட்சிகள் இந்த இரண்டு தினங்களையும் மிக முக்கியமானதாக கருதுவார்கள் அதற்கான நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பார்கள். அந்த வகையில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், உள்ளிட்ட கட்சிகள் இதனை பின்பற்றி வருகின்றன.
இந்த நிலையில் நாளை அனுசரிக்கப்படுகின்ற மாவீரர் நாள் மற்றும் நவம்பர் 27ஆம் தேதி வருகின்ற பிரபாகரன் பிறந்தநாள் ஆகிய இரண்டையும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நினைவு கூறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது..
தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகள் அனுசரிக்கின்ற மாவீரர் நாள் போன்றவற்றை அனுசரிப்பது கிடையாது.
தற்போது தமிழ் தேசியம் எனது ஒரு கண் என பேசியுள்ள விஜய் திமுக அதிமுக பாணியை பின்பற்றுவாரா அல்லது மாவீரர் நாளினை அனுசரிப்பாரா அல்லது இரண்டு கண்ணில் ஒரு கண்ணை கவனிக்காது விட்டுவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
What's Your Reaction?