வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
வார விடுமுறை தினத்தையொட்டி கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 28.09.2024, 29.09.2024, ஞாயிறு வார விடுமுறையையொட்டி திருச்சி கும்பகோணம் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை நாகப்பட்டினம், திருவாரூர் மயிலாடுதுறை வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி புதுக்கோட்டை காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி கும்பகோணம் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை நாகப்பட்டினம்,வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி புதுக்கோட்டை, காரைக்குடி இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 295 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர் மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை தஞ்சாவூர். நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய இடங்க ளுக்கும். கோய ம்புத்தூர், திருப்பூர் மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும் 175 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
அதேபோன்று விடுமுறைக்கு பின் பயணிகள் மீண்டும் அவரவர் ஊர் களுக்கு திரும்ப செல்ல 29.09.2024, 30.09.2024. ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை நாட்களில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களில் 150 சிறப்பு பேருந்துகளும், இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய் து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (TNSTC Mobile App) Android / 1 phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்துகொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?