பாராலிம்பிக்கில் அசத்திய தமிழ்நாடு வீராங்கனைகள்.. வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று சாதனை!

அரையிறுதியில் துளசிமதி முருகேசனிடம் தோல்வி அடைந்த மனிஷா ராமதாஸ், மூன்றாவது இடத்திற்கான பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரெனை 21-12, 21-8 என்ற கணக்கில் வீழ்த்திய வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Sep 2, 2024 - 21:25
Sep 3, 2024 - 10:17
 0
பாராலிம்பிக்கில் அசத்திய தமிழ்நாடு வீராங்கனைகள்.. வெள்ளி, வெண்கல பதக்கம் வென்று சாதனை!
Tulasimathi Murugesan And Manisha Ramadoss

பாரீஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியாவில் இருந்து 84 வீரர்கள், 12 விளையாட்டு பிரிவுகளில் கலந்து கொள்கின்றனர். நமது தமிழ்நாட்டை சேர்ந்த 'தங்க நாயகன்' மாரியப்பன் தங்கவேல், துளசிமதி முருகேசன், சிவராஜன் சோலைமலை, மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி சிவன், கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் பாராலிம்பிக் தொடரில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பாராலிம்பிக் தொடரில் தமிழ்நாடு வீரர்கள் துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதாவது பெண்கள் ஒற்றையர் SU5பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சியா குய் யாங்விடம் 17-21, 10-21 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

துளசிமதி முருகேசன் அரையிறுதியில் தமிழ்நாடு வீராங்கனை மனிஷா ராமதாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்து இருந்தார். பாராலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் துளசிமதி முருகேசன் என்பது குறிப்பிடத்தக்கது. 

அரையிறுதியில் துளசிமதி முருகேசனிடம் தோல்வி அடைந்த மனிஷா ராமதாஸ், மூன்றாவது இடத்திற்கான பேட்மிண்டன் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கேத்ரின் ரோசன்கிரெனை 21-12, 21-8 என்ற கணக்கில் வீழ்த்திய வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

துளசிமதி முருகேசன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை மருத்துவ அறிவியல் மாணவி ஆவார். மனிஷா ராமதாஸின் சொந்த ஊர் திருவள்ளூர் ஆகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow