ஆன்மிகம்

விமர்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தென்காசி மாவட்டம் விகே புதூர் அருகே பிரசித்தி பெற்ற அம்மன் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் விமர்ச்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விமர்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழா.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
விமர்சையாக நடைபெற்ற பூக்குழி திருவிழா

தென்காசி மாவட்டம் விகே புதூர் அருகே உள்ள ஊத்துமலை ஸ்ரீ உச்சிமாகாளி  அம்மன் கோயில் பூக்குழு திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த பூக்குழி திருவிழாவானது எட்டு நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி மாத பூக்குழி திருவிழாவானது கடந்த 25 -ம் தேதி வெகுவிமர்சையாக தொடங்கியது.

தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அதன் பின்னர் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் தங்களது வேண்டுதல் நிறைவேற விரதம் இருந்த 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் அக்னிசட்டியை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் முன்பு உள்ள அக்னி குண்டத்தில்  பரவத்துடன் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்கள் பல்வேறு தெய்வங்களின் உருவம் கொண்ட முளைப்பாறியை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.