கஸ்தூரி மன்னிப்பு கேட்டு விட்டார்.. தீவிரவாதி போல நடத்துவதா?.. தமிழிசை ஆவேசம்

நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டும் காவல்துறையினர் தீவிரவாதி போல் நடத்துவது சரியல்ல என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Nov 19, 2024 - 02:18
Nov 19, 2024 - 02:22
 0
கஸ்தூரி மன்னிப்பு கேட்டு விட்டார்.. தீவிரவாதி போல நடத்துவதா?.. தமிழிசை ஆவேசம்
கஸ்தூரியை தீவிரவாதி போல் நடத்துவது சரியல்ல - தமிழிசை சௌந்தரராஜன்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88-வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டி, காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், வ.உ.சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். இந்திய பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று போராடியவர். தெலுங்கானாவில் அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையில் பணிபுரியக் கூடாது என்ற சட்டம் உள்ளது. அதே போன்று தமிழகத்திலும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, திமுக தேர்தல் வாக்குறுதியாக எதையெல்லாம் சொன்னார்களோ அதை எல்லாம் மறுத்து வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை சரியாக நிரப்பாததால் தான் அரசு மருத்துவர்கள் சிறப்பு துறையில் சேர முடியாமல் போகிறது.

திருமாவளவனின் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு அவர் கேட்டதை செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே தவிர, மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அவர் செய்யவதில்லை. திருமாவளவன் கூட்டத்தைக் கூட்டி அந்த கூட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏன் முதல்வர் இன்னும் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார்.

நடிகை கஸ்தூரி விஷயத்தில் தமிழக அரசு பாரபட்சமாக இருந்து வருகிறது என்றும் அவர் தவறான கருத்துகளை தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்டும் அவரை தீவிரவாதி போன்று காவல்துறையினர் நடத்துவது தவறு என்றும் கூறினார்.

மேலும், தமிழக வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது அதனால்தான் இன்று 16-வது நிதிக்குழு தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளது. நிதிக்குழுவிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதலமைச்சர் முன் வைத்துள்ளார். இதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இதே கோரிக்கையை கடந்த நாட்களுக்கு முன்பாக நிதிக்குழுவை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர் நிராகரித்தார். நிதி ஆயோக் போன்ற கூட்டங்களை புறக்கணிக்காமல், தமிழ்நாடு அரசு கலந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கையை நான் முன் வைக்கிறேன் என்றார்.

tamilisai soundarajan said not right to treat actress kasthuri like a terrorist

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow