#BREAKING | செந்தில் பாலாஜி வெளியே வந்ததும் உடனே வந்த ஆம்புலன்ஸ்.. பயங்கர பதற்றம்
சென்னையை அடுத்த புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
சென்னையை அடுத்த புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன் என தெரிவித்துள்ளார். என்மீதான பொய் வழக்கில் இருந்து சட்ட ரீதியில் சந்தித்து நிச்சயம் வெளிவருவேன் எனவும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.
நிபந்தனை ஜாமின் கிடைத்தும் சிறையிலிருந்து வெளிவருவதில் சிக்கல் நீடித்திருந்த நிலையில் தற்போது சென்னையை அடுத்த புழல் சிறையிலிருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளிவந்தார்.
திமுகவில் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் மக்களிடம் மனமாற்றம் இருக்காது எனவும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டதாகவும் தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்க கூடாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரை பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் வெளிவருதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் புழல் சிறை முன்பு திமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று மாலை அல்லது நாளை புழல் சிறையில் இருந்து வெளியே வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக புழல் சிறை வாசலில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
செந்தில் பாலாஜி சாட்சிகளை தொடர்பு கொண்டால் ஜாமின் ரத்து செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Senthil Balaji Bail Condition Details in Tamil : சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் கைதான செந்தில் பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்த நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Senthil Balaji Bail : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Actor Soundararaja Criticize CM Stalin Tweet : செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்த நிலையில், அதனை துணை நடிகர் சௌந்தரராஜா விமர்சித்துள்ளார்.
BJP SG Suryah on Senthil Balaji Jail : அதிக நாட்கள் சிறையில் இருந்ததில் ஆ.ராசாவை, செந்தில் பாலாஜி வீழ்த்தி உள்ளதாக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில், இது சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
CM MK Stalin Welcomes Senthil Balaji : சட்டவிரோத பணிப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில், செந்தில் பாலாஜி நிரபராதி இல்லை இல்லை என அதிமுக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது. இன்று மாலை அல்லது நாளை காலை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இதன் மூலம் 15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.
Senthil Balaji Conditional Bail : சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்