கனமழை எதிரொலி: 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்!
200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்கும் சிசிடிவி வெளியீடு.
சாலை சீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தி சீரமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.
சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காப்பாற்று.. காப்பாற்று.. என்ற முழக்கத்தோடு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மதுரை சோழவந்தான் பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் முத்தையா என்பவருக்கும் மதன்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த முத்தையா மகன் விக்னேஸ்வரன் மதன்குமாரின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதையடுத்து மதன்குமார் அளித்த புகாரின்பேரில் விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் கோவைக்கு திரும்புவதால் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்.
குடி நீருக்கு பயன்டும் வைகை ஆற்று நீரை மாசு படாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
குடிநீருக்காக பயன்படும் வைகை ஆற்றை மாநகராட்சி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டாமா என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வைகை ஆற்றில் குப்பை போடுவோர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசம் நினைவாலய பொறுப்பாளர் முன்னிலையில் அகற்றப்பட்டு பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
வண்ணமயமாக ஒளிரும் ”தூங்கா நகரம்” வெளியான கழுகு பார்வை காட்சிகள்| Kumudam News
தீபாவளி நாளான இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மதுரையில் இன்று வழக்கமான கூட்டத்தை விட அதிகளவில் மது பிரியர்கள் மதுக்கடையில் குவிந்ததால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து செல்லூரில் ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கால்வாய் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆபத்தான முறையில் காரில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மருது சகோதரர்கள் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரையில் மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு இன்னும் 3 நாட்கள் ஆகும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இரவிலும் கொட்டித்தீர்க்கும் கனமழை - முழங்கால் அளவு நீரில் மக்கள் கடும் அவதி
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள காந்தி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.
மதுரையில் பெய்த கனமழை காரணமாக அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கன்வாடி மையங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர்
மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
மதுரையில் பெய்த கனமழையால் அங்குள்ள உழவர் சந்தை, குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது.
குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அண்ணாமலை பல்கலை., உள்பட 4 பல்கலைக் கழகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.