K U M U D A M   N E W S

4 பல்கலை. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அண்ணாமலை பல்கலை., உள்பட 4 பல்கலைக் கழகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தவறாமல் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லட்டு சர்ச்சை: ’அறிக்கையை வெளியிடாதது ஏன்?’ நீதிமன்றம் கேட்ட கேள்வி!

திருப்பதி லட்டு சர்ச்சை: மத்திய உணவுத்தர கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு இடைக்காலத் தடை

சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை விட சார்பதிவாளர் உயர்ந்தவர்களா..?

மூல ஆவணங்கள் இல்லை எனக்கூறி பத்திரப்பதிவை நிராகரித்த சார்பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடகோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தை விட சார் பதிவாளர் உயர்ந்தவர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.   

Rajaji Hospital : மதுரை அரசு மருத்துவமனை விபத்து.. அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Madurai Rajaji Hospital Accident : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளே கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணைக்கு எடுத்தது. விசாரணையில் சுகாதாரத்துறை செயலாளர், மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர், பொதுப்பணித்துறை பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Water Canel Issue : அரசு அதிகாரிகள் மீது நீதிமன்றம் அதிருப்தி

Water Canel Issue in Ramanathapuram : ராமநாதபுரத்தில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார இளைஞர்கள் தாமாக முன் வந்து அனுமதி கோரியும் ஏன் அனுமதி வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரையில் 2 முக்கிய நுழைவு வாயில்களை இடிக்க அதிரடி உத்தரவு

மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள நுழைவு வாயில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நுழைவு வாயில் ஆகியவற்றை இடித்து அகற்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும்.. - அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது 

வீடியோ வெளியிட்டதால் காவலர் பணிநீக்கம்.. அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி கருத்து

மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.