இந்தியாவிலேயே முதன் முறையாக உதகையில் அதிநவீன மருத்துவக்கல்லூரி மருத்துவமனை..!
இந்தியாவிலேயே முதன் முறையாக பழங்குடியினர்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன் மலை பிரதேசத்தில் அதிநவீன உயர் சிகிச்சையுடன் 700 படுக்கை வசதிகளுடன் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை எதிர்வரும் ஆறாம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக, மருத்துவ கல்லூரி ஆய்வுக்கு பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.