SL vs NZ Test Match : சுழல் வலையில் மிரட்டிய ஜெயசூர்யா.. நியூசிலாந்தை பந்தாடிய இலங்கை!
Sri Lanka vs New Zealand Test Match : 35 ரன்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை தனது 2வது இன்னிங்சை விளையாடியது. திமுத் கருணாரத்னே (83 ரன்), தினேஷ் சண்டிமால் (61 ரன்), ஏஞ்சலோ மேத்யூஸ் (50 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் அந்த அணி 309 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.