இனி குப்பை போட்டால் அபராதம்..?? ஷாக் உத்தரவு
"காணும் பொங்கலன்று பொதுஇடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?"
"காணும் பொங்கலன்று பொதுஇடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?"
காணும் பொங்கல் தினத்தில் பொது இடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அமரன் திரைப்படம், டிவிஆர் ரேட்டிங்கில் 8.5 என்ற உயரிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளது. திரையரங்கில் வெற்றிபெற்ற அமரன் திரைப்படத்தை, பொங்கல் பண்டிகையன்று பலரது இல்லங்களிலும் ஒளிபரப்பான நிலையில், பலரும் கண்டு மகிழ்ந்துள்ளனர்.
புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.
தமிழகத்தில் காணும் பொங்கல் திருவிழா கோலாகலம்.
பொதுமக்கள் பாதுகாப்புக்காக தடுப்புகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இறைச்சிக் கடைகளில் கூட்டமாகக் குவிந்த மக்கள்.
திமுகவை அழிக்கும் வல்லமை இங்கிருக்கும் அரசியல் கட்சியில் யாருக்கும் இல்லை என்றும் இனி ஒருவர் பிறந்து வந்தால் பார்க்கலாம் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் காவல் தெய்வத்திற்கு பொங்கல் படைத்து காணும் பொங்கல் கொண்டாட்டம்.
நாளை காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.
தைப்பொங்கலின் 2-ஆம் நாளான இன்று மாட்டுப்பொங்கல் பண்டிகை.
தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி அடுத்த ஆரோவில் பகுதியில் உள்ள மோகன கலாசார மையத்தில் பொங்கல் விழா.
தேவாலய வளாகத்திற்குள் வண்ண கோலமிட்டு கரும்புகளால் அலங்கரித்த கிறிஸ்தவர்கள்.
தங்கள் குடும்பம், உறவினர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய மக்கள்.
பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
பொங்கல் அன்று நடத்தப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வை மாற்றக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய் ‘நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025-ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு.
பொங்கல் பண்டியையை ஒட்டி மருமகனுக்கு பிரமாண்ட விருந்து.
சென்னை தியாகராய நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்க குவிந்த பொதுமக்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிகழ்வை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்கள் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்
சென்னையில் போகி பண்டிகையை கொண்ட பழையன கழிதல் என்ற முறையில் மக்கள் பழைய பொருட்களை தீயிட்டு எரித்ததால் சென்னையில் மாசு அதிகரித்து புகை மண்டகமாக காட்சி அளிக்கிறது.