K U M U D A M   N E W S

சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை இனி ஆண்டுதோறும் நடத்த வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு | Kumudam News

தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு

கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில் நிலம் குத்தகை வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் கல்லூரி அமைக்க, கொளத்தூர் சோமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு வழங்குவதை எதிர்த்த வழக்கை சென்னை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்து - காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதி வளர்ச்சிக்கு எதிரானது - உயர்நீதிமன்றம்

சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி - இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கலாஷேத்ரா நடனப் பள்ளி பாலியல்  வழக்கின் விசாரணை துவங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல்  வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் நியமனம்.. கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு..!

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதல் உறுப்பினர் நியமிக்க கோரி, ஆணையத் தலைவர் கடிதம் அனுப்பி 22 மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கு... தூக்கு தண்டனை கைதி விளக்கமளிக்க உத்தரவு..!

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரிய விசாரணையில், தனக்கு வழக்கறிஞர் நியமித்துக் கொள்கிறாரா என விளக்கமளிக்க, குற்றவாளி சதீஷை ஜனவரி 29ம் தேதி காணொலியில் ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ், நயன்தாரா வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணன்... மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட பாம் சரவணனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோசடி வழக்கில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத மணல் கொள்ளை – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்,  அரசுத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானை வழித்தடத்தில் மண் எடுத்த விவகாரம்.. சிறப்பு புலனாய்வு குழுவை நியமனம்..!

கோவையில் யானை வழித்தடத்தில்  மண் எடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் முறைகேடு.. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையில்  அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்தால்,  சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலையை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மனு.. ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்..!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. 

LGBTQIA PLUS உரிமைகள் பாதுகாப்பு.. அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்..!

LGBTQIA PLUS உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் வழங்க அவகாசம் கேட்ட அரசு தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

விதி மீறிய கட்டிடங்களுக்கு இரக்கம் காட்ட முடியாது.. சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

விதிமீறி கட்டப்பட்டுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோவில்களுக்கு இரக்கம் காட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ மீதான வழக்கு ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

திமுக எம்.எல்.ஏ காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்... விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின் ..!

அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC தேர்வு.. கராத்தே போட்டியை சேர்க்க அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் - நீதிமன்றம் பதில்

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் கராத்தே விளையாட்டையும் சேர்ப்பது  குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் சிம்புவுக்கு 1 கோடி - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை நடிகர் சிம்புக்கு திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிறைத்துறை அதிகாரிகள் மீதான முறைகேடு புகார்.. லஞ்ச ஒழிப்பு துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனுஷ் வழக்கு - நயன்தாரா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லுக் அவுட் நோட்டீஸ் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்  வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.