K U M U D A M   N E W S

5 இளைஞர்கள் ஒரே நேரத்தில் பலி..!.. தண்ணீருக்குள் தத்தளித்த 'ஒரு உயிர்'

ஏரியில் கார் கவிழ்ந்து விபத்தில், 5 பேர் பலி தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் போட்டி - புதுக்கோட்டையில் பதற்றம்

புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜக விசிக இடையே போட்டி

அதிகாரிகள் யாரும் வந்து பாக்கல.. போராட்டத்தில் குதித்த மக்கள்

கடலூர் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் கிராமத்திற்குள் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் புகுந்ததை அடுத்து, தங்களை இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை எனக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி மெட்ரோ பணி.. கட்டுமான கம்பிகள் சாலையில் விழும் அபாயம்..!

பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிக்காக கட்டப்பட்டு வரும் தூணில் கம்பிகள் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

“ஐயயோ அப்படிலாம் பண்ணிருப்பானே.. ” மகளை கடத்திய தந்தை. நடுரோட்டில் கதறி அழுத பெண்!

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே மகளை காணவில்லை என்று சாலையில் அமர்ந்து பெண் கூச்சலிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளாவில் கோர விபத்து - தமிழர்கள் 5 பேர் துடிதுடித்து உயிரிழப்பு

கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து – 3 பேருக்கு நேர்ந்த சோகம்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி கோர விபத்து

நூற்றுக்கும் மேற்பட்ட லோடு வாகனங்கள்... டன் கணக்கில் கொட்டப்படும் கழிவுகள்

சென்னை புறநகர் பகுதியான பூவிருந்தவல்லியில் நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள தொழிற்சாலை போன்ற கழிவுகளால் மாசு ஏற்படுவதோடு நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள்... மீட்க வலியுறுத்தி குடும்பத்தினர் சாலை மறியல்..!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் பாலத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

பேட்ச் வொர்க் செய்த மாநகராட்சி – சிக்கிய குப்பை லாரி

சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், மாநகராட்சி வாகனம் சிக்கியது. குப்பை அள்ளும் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட பள்ளத்தில் வாகனத்தின் பின்பகுதி சிக்கியது.

மருத்துவர் எங்கே..? குரல் உசத்திய பெற்றோர் உடனே வந்த போலீஸ்.. பரபரப்பான கிருஷ்ணகிரி

மருத்துவர் இல்லாத நிலையில், செவிலியர் செல்போனை பயன்படுத்தி அலட்சியமாக செயல்பட்டதாக புகார் தெரிவித்து பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

குடும்பமாக பைக்கில் சென்ற நேரத்தில் நடந்த அசம்பாவிதம்.. துடிதுடித்து பலியான பிஞ்சு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது கணவன், மனைவி மற்றும் குழந்தை படுகாயமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

மீண்டும் நாங்குநேரி சம்பவம்.. வீடு புகுந்து மாணவன் மீது கொடூர தாக்குதல்.. உறவினர்கள் சாலை மறியல்

நெல்லை மேலப்பாட்டம் பகுதியில் காரில் மோதும்படி சென்றவர்களை தட்டிக்கேட்ட மாணவரை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இதையடுத்து மாணவனின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

"திமுக அரசின் அலட்சியத்தால் 2 போலீசார் பலி" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக அரசின் அலட்சியத்தால் 2 பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நிர்வாகிக்கு நேர்ந்த சோகம்... போரட்டத்தில் குதித்த அதிமுகவினர்.. ஸ்தம்பித்த சாலை

சிவகங்கை அதிமுக கிளை செயலாளர் கணேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொளையாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..

புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீர் ஸ்லிப்.. ஒரே இடி " மேலே ஏறி இறங்கிய வேன்.. " திக் திக் வீடியோ வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் மீது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

ஜவுளி வியாபாரிகள் சாலை மறியல்.. ஈரோட்டில் பயங்கர பரபரப்பு

ஈரோட்டில் மாநகராட்சி ஜவுளி வணிக வளாக வியாபாரிகள், சாலையோர ஜவுளி கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூரில் திடீரென போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி பள்ளி மாணவர்களும், பெற்றோரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்... நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில் பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

30 அடி ஆழ பள்ளத்தில் புரண்டு கவிழ்ந்த அரசு பேருந்து.. பயணிகளின் நிலை என்ன?

ஆந்திரா கடப்பா மாவட்டத்தில் உள்ள கதிரியில் இருந்து புலிவெந்தலாவுக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

அசுர வேகத்தில் பறந்து பல்டி அடித்த கார்.. காருக்குள் இருந்த தொழிலதிபர் கதி? - நெஞ்சை பிளக்கும் காட்சி

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரை ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினார்.

தாறுமாறாக ஓடிய சொகுசு கார்... ஏழு பேருக்கு எலும்பு முறிவு.... அடித்து துவைத்த பொதுமக்கள்!

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார், ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

தாயின் கண் முன்னே உடல் நசுங்கி பலியான மகன்.. நடுரோட்டில் கதறி அழுத குடும்பம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாலை விபத்தில் தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளி பேருந்துகள் விபத்து... சிறைபிடித்த பெற்றோர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்துகள் முந்தி செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 மாணவிகள் காயமடைந்த நிலையில் பேருந்தை சிறை பிடித்து பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.