கிராம வங்கியில் கொள்ளை முயற்சி.. அலாரத்தால் தப்பிய கொள்ளையர்கள்..!
அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அதிகாலை நேரத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அப்போது வங்கியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.