சென்னையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்துள்ள திருமுருகன் பூண்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் பெண்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி செய்ய தடையாக உள்ளவைகளை அடையாளம் கண்டறிந்து அவற்றை தீர்வு காண தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் வெளியூரில் பணியாற்றும் பெண்களுக்காக தோழி விடுதித் திட்டம், குழந்தைகளை பராமரித்தல் மற்றும் முதியவர்களை பாதுகாக்க வட்டாரம் தோறும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கட்டணம் இல்லா பேருந்து வசதியால் பெண்கள் அதிக அளவில் சேமிக்க முடிகிறது. அதனை கொண்டு தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயன்படுத்த முடிகிறது என தெரிவித்தார். மேலும் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் 22,345 அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 3000 மேற்பட்ட இடங்களில் இந்த புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு பணி செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் முதலமைச்சரின் கனவான 2030ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு ட்ரில்லியன் பொருளாதார இலக்கை எட்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகம் முழுவதும் போக்சோ குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 1098 எண்ணுக்கு தொடர்ந்து புகார்கள் வருகிறது. காவல்துறை, கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை இந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை நேய தமிழகமாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட திறமைகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 84 கோடியே 91 லட்சம் ரூபாய் நிவாரணம் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.