2026 தேர்தலில் தனித்து தான் போட்டி.. ஆனால் கூட்டணிக்கு வரலாம்.. குழப்பி அடித்த சீமான்

எனது தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருபவர் வரலாம் என்றும் ஆனால் 2026 தேர்தலில் தனித்து தான் போட்டியிடுகிறேன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

Sep 16, 2024 - 13:40
Sep 16, 2024 - 13:42
 0
2026 தேர்தலில் தனித்து தான் போட்டி.. ஆனால் கூட்டணிக்கு வரலாம்.. குழப்பி அடித்த சீமான்
2026 தேர்தலில் தனித்து தான் போட்டியிடுகிறேன் - சீமான்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியில் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கூறுகிறது. எல்லை தாண்டி கேரளா மீனவர்கள் மீன் பிடிப்பது இல்லையா? மீனவர்கள் என்பது பிரச்சனை அல்ல தமிழன் என்பதுதான் அவர்களுக்கு பிரச்சனை.

படகுகளை பிடித்து ஏலம் இடுவது, வளைகளை சேதப்படுத்துவது, மீனவர்களை மொட்டை அடிப்பது. இது தமிழக மீனவர்களுக்கு அடிக்கும் மொட்டை அல்ல; ஆட்சியாளருக்கு அடிக்கும் மொட்டை. 

தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற, திமுக தனித்து தேர்தலில் நிற்குமா? மத்திய அமைச்சரவையில் நீங்கள் பங்கேற்றீர்களா இல்லையா? திமுக பெரிய வீரன் என்றால் தனித்து நின்று ஜெயிக்க வேண்டியது தானே. ஆட்சியை தாங்கிப் பிடிக்க வேண்டும். ஆனால் ஆட்சியில் பங்கு கொடுக்க மாட்டீர்கள்? அதானியின் முதலீடுகள் அனைத்தையும் மோடி தான் செய்கிறார் என்று கெஜ்ரிவால் கூறினார். அதனால் அவரை தூக்கி உள்ளே போட்டு விட்டார்கள் அதே கருத்தை நான் வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமாகுமா? பேரறிஞர் அண்ணா காலத்தில் மதுவிலக்கு இருந்ததா இல்லையா? ராஜாஜி. காமராஜர் ஆகியோர் ஆட்சி காலத்தில் மதுவிலக்கு இருந்ததா இல்லையா? சாத்தியப்பட்டு இருந்ததா, இல்லையா? மதுவிலக்கு நீக்கியது யார்? ஐயா கருணாநிதி தான்.

கொரோனா காலத்திலும் திடீரென்று மூடினார்கள். எத்தனை பேர் குடிக்காமல் செத்தார்கள். இன்று நவநாகரிக பெண்களையே குடிக்க வைத்து விட்டீர்கள். சாராயா ஆலையை திறந்து, குடிக்க வைத்த பின்பு, குடிப்பது தப்பு என்று எப்படி கூறுவது? இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சருக்கு சாராய கம்பெனி உள்ளது. நீங்கள் முதலமைச்சர்களை தேர்வு செய்வீர்களா? சாராய அதிபர்களை தேர்வு செய்தீர்களா?

பணம் மட்டும் கொடுக்கவில்லை என்றால் தேர்தலில் என்னை வீழ்த்த முடியாது. 2026 தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. அதன் பின்பு பேசுவோம். என்னிடம் உணர்ச்சி இருப்பதால், பத்திரிகையாளர்களிடம் நான் கோபப்படுகிறேன். எனது கோபம் இந்த மண்ணின் மீது மக்களின் மீதும் இருக்கும் பேரன்பு தான்.

நான் தனித்துப் போட்டியிடுகிறேன். என்னுடன் சேர வேண்டும் என்பது வேறு ஒருவர்தான் முடிவெடுக்க வேண்டும். எனக்கு ஒரு கனவு இருக்கிறது. எனது முன்னோர்களின் கனவு. என்னுடன் சேர்ந்தால் நாடும், மக்களும் நன்றாக இருப்பார்கள் என்று நினைத்தால் என்னுடன் வாருங்கள். அது யாராக இருந்தாலும் சரி. அதனால் நான் தனித்து தான் போட்டியிடுகிறேன்” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow