ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்... ஜி.கே.வாசன் பேட்டி!

திமுகவில் என்ன மாற்றம் கொண்டு வந்தாலும் மக்களிடம் மனமாற்றம் இருக்காது எனவும் ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டதாகவும் தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Sep 27, 2024 - 00:10
 0
ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்... ஜி.கே.வாசன் பேட்டி!
ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்... ஜி.கே.வாசன் பேட்டி!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் கடலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (செப். 26) நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் செயல்பாடுகள் குறித்து கட்சியினர் இடையே ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டு அவர் பிணையில் வெளிவந்துள்ளார். சாட்சிகளை கலைக்க கூடாது என நீதிமன்றம் உறுதியாக இருந்து  அதனை கண்காணிக்கும். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவாரா என்பது ஆட்சியாளர்களின் கருத்து ஆனால் ஆட்சியாளர்களின் சரி மற்றும் தவறை மக்கள் கவனித்துக் கொண்டுள்ளனர்” என்றார். மேலும் முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்த பொழுது திமுகவால் குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்றார் என்பதை நினைவு கூறுகிறேன் என தமிழக முதல்வரின் கருத்து குறித்து எதிர்வினை ஆற்றினார். 

மேலும் படிக்க: செந்தில் பாலாஜி ஜாமின்: பாராட்டி வரவேற்பது வெட்கக்கேடு... வானதி சீனிவாசன் தாக்கு!

தொடர்ந்து பேசிய அவர், மதுவில்லா தமிழகம் என்பது தமிழ் மாநில காங்கிரஸின் கொள்கை. 2015இல் ஆளுநரிடம் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என மனு அளித்ததும், மது கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என ஆர்ப்பாட்டம் போராட்டம் என நடத்தியது தமிழ் மாநில காங்கிரஸ். அனைத்துக் கட்சிகளும் மது கடைகள் இருக்கக் கூடாது என கூறுவது சரிதான்.  மதுக்கடைகளை மூட வேண்டிய அவசரமும் அவசியமும் உள்ளது. ஆனால் திமுக அரசு மது கடைகளை மூடாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. திமுகவிற்கு மக்கள் மீது அக்கறை கிடையாது. வருமானம் கஜானா இவற்றை நோக்கி தான் திமுகவின் பயணம் உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பல கூட்டணிகள் பலம் பெறும் சில கூட்டணிகள் மாறும். தேர்தலில் ஆட்சி மாற்றம் வர 100% வாய்ப்பு இருக்கும் தமாக வலிமையான கூட்டணியில் வெற்றி பெறும் கூட்டணியில் இருக்கும். திமுக அரசியலில் இனி என்ன மாற்றம் செய்தாலும் மக்களிடம் மனமாற்றம் இருக்காது. ஆட்சியாளர்களின் செயல்பாடுகளில் மக்களிடம் அதிருப்தி உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக திமுக உள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராக உள்ளனர். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மை இவற்றின் காரணமாகவே தமிழ் மாநில காங்கிரஸின் பெயர் அமைதியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow