TVK Vijay: “நடிச்சது பிட்டு... மாநாடு ஷிட்டு..” தவெக தலைவர் விஜய்க்கு எதிராக ட்ரெண்டாகும் ஷேஷ்டேக்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை (அக்.27) நடைபெறவுள்ள நிலையில், விஜய்க்கு எதிராக “நடிச்சது பிட்டு... மாநாடு ஷிட்டு..” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Oct 26, 2024 - 16:28
 0
TVK Vijay: “நடிச்சது பிட்டு... மாநாடு ஷிட்டு..” தவெக தலைவர் விஜய்க்கு எதிராக ட்ரெண்டாகும் ஷேஷ்டேக்!
தவெக மாநாட்டுக்கு எதிராக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோவான விஜய், இனிமேல் முழுநேர அரசியல்வாதியாக பயணிக்க முடிவு செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், அதன் முதல் மாநில மாநாட்டுக்காக தயாராகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில், தவெக மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதோடு, கட்சித் தொண்டர்களும் விக்கிரவாண்டி நோக்கி பயணித்து வருகின்றனர். இதனால் விழுப்புரம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பரபரப்பாக காணப்படுகிறது. 

தவெக மாநாட்டை முன்னிட்டு, இன்று மாலை அக்கட்சியின் தலைவர் விஜய் விக்கிரவாண்டி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தவெக மாநாட்டுக்கு எதிராக ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே அவரது கொள்கை, சித்தாந்தம் என்னவென்று கேள்விகள் எழுந்து வருகின்றன. முக்கியமாக திமுகவுக்கு எதிராக தான் விஜய் அரசியல் செய்யப் போகிறார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் விஜய்யின் டார்க்கெட் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இதுபற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதுவும் கண்டுகொள்ளவில்லை. அதேபோல், விஜய்யும் தனது அரசியல் கொள்கை குறித்தும், யாருக்குப் போட்டியாக களமிறங்கவுள்ளார் என்பது பற்றியும் இதுவரை பேசவே இல்லை. இதனால் நாளைய தினம் மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் தவெக மாநாட்டுக்கு எதிராக “நடிச்சது பிட்டு... மாநாடு ஷிட்டு..” என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது நெட்டிசன்களின் வேலையா அல்லது ஏதேனும் அரசியல் கட்சியினரின் தாக்குதலா எனத் தெரியவில்லை.

இன்னொரு பக்கம், தமிழக வெற்றிக் கழகம், தவெக விஜய் ஆகிய ஹேஷ்டேக்களும் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் மாநாட்டில் பங்கேற்க உற்சாகமாக கிளம்பி வருகின்றனர். நாளை நடைபெறும் தவெக மாநாட்டில், 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவல்துறை சார்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow