பல் சொத்தை நீங்க இயற்கை வழிமுறைகள்

பல் வலியை இயற்கையான வழிமுறைகள் கொண்டு எப்படிப் போக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

Sep 11, 2024 - 19:19
 0
பல் சொத்தை நீங்க இயற்கை வழிமுறைகள்
teeth pain

தாங்க முடியாத வலிகள் எத்தனையோ இருந்தாலும் அப்படிச் சொன்னதும் நம் நினைவுக்கு வருவது பல் வலிதான். பல்லை முறையாகப் பராமரிக்காமல் சொத்தை ஆகிவிட்டால் ஒரு கட்டத்தில் வலி ஆளையே கொன்று விடும். பல் சொத்தையைப் போக்க இன்றைக்கு நவீன மருத்துவத்தில் பல வழிமுறைகள் இருக்கின்றன. அப்படி அல்லாமல் சிகிச்சை இன்றி இயற்கையான வழியில் பல் சொத்தையைப் போக்க முடியுமா என்பது விளக்குகிறார் சித்த வர்ம மருத்துவர் பு.மா.சரவணன்...

‘‘பல் வலி இருக்கிறதென்றால் திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கி வந்தால் உடனடியாக பல் வலி குணமாகும். பல் சொத்தை  படிப்படியாகக் குறையும். 5 கிராம் படிகாரத்தை அரை லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை குணமாகி பல் சொத்தையும் படிப்படியாகக் குறையும். 

5 கொய்யா இலைகளை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். நூறு மில்லியாகும் வரை சுண்டிய பிறகு அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் சொத்தை, பல் வலி, பல் கூச்சம் ஆகியவை குணமாகும். கருவேலம்பட்டைத் தூளில் சம அளவு உப்பு கலந்து பல் துலக்கி வருவதும் இதற்குத் தீர்வாக இருக்கும். ஒரு கைப்பிடி அளவு ஆலம் விழுதை துண்டு துண்டாக நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக சுண்டிய பிறகு அத்தண்ணீரில் நாளொன்றுக்கு நான்கு முறை வாய்கொப்பளித்து வரும்போது பற்கள் வலுவடையும், பல் சொத்தை குணமாகும். 

எதுவாயினும் வருமுன் காப்பதே சாலச்சிறந்தது. பல் சொத்தையின் காரணமக பல் வலி என்கிற அவஸ்தையை அனுபவிக்காமல் இருக்க பல் சொத்தையே ஏற்படாத வண்ணம் நடந்து கொள்வது அவசியம். தினசரி காலையிலும், இரவும் பல் துலக்குவது, சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பது போன்ற அடிப்படையான விஷயங்களைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்” என்கிறார் சரவணன். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow