This Week OTT Release: மெய்யழகன், ஹிட்லர், கடைசி உலகப் போர்... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
மெய்யழகன், ஹிட்லர், கடைசி உலகப் போர், கோழிப்பண்ணை செல்லதுரை உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.
சென்னை: இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு தரமான படங்கள் காத்திருக்கின்றன. அதன்படி கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் இந்த வாரம் முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பிரேம்குமார் இயக்கத்தில் ஃபீல்குட் மூவியாக உருவான மெய்யழகன் படத்துக்கு, ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இப்படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் மெய்யழகன், இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், விஜய் ஆண்டனி நடித்துள்ள ஹிட்லர் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. தனசேகரன் இயக்கத்தில் ஆக்ஷன் ப்ளஸ் கமர்சியல் மூவியாக உருவான ஹிட்லர், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஜய் ஆண்டனியுடன் ரியா சுமன், கெளதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனிக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஹிட்லர், எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில், இத்திரைப்படம் இந்த வாரம் முதல் அமேசான் ப்ரைம், சிம்பிளி சவுத் தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
மேலும் ஹிப்ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் திரைப்படமும் இந்த வாரம் முதல் ஓடிடியில் வெளியாகிறது. இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த ஹிப் ஹாப் ஆதி, கடைசி உலகப் போர் படத்தை அவரே இயக்கியிருந்தார். அதுமட்டுமில்லாமல் அவரே தயாரிப்பு, இசை என இந்தப் படத்திற்காக ஜூனியர் டி.ஆர்-ஆகவே மாறிவிட்டார். ஓவர் பில்டப் ப்ரோமோஷன்களுடன் வெளியான கடைசி உலகப் போர் படத்தின் விமர்சனம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில், இந்தப் படம் அமேசான் ப்ரைம், டென்ட்கொட்டா ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாகிறது.
இந்த வரிசையில் சீனுராமசாமி இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. கடந்த மாதம் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு, குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கிராமத்து பின்னணியில் அண்ணன் – தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சீனுராமசாமி. இந்நிலையில், கோழிபண்ணை செல்லதுரை திரைப்படம் இந்த வாரம் முதல் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்தியில் The Miranda Brothers திரைப்படம் ஜியோ சினிமா ஓடிடியிலும், ஸ்விகாடோ (Zwigato) திரைப்படம் அமேசான் ப்ரைம், ஏய் ஜிந்தகி (Aye Zindagi) ஜீ5, Do Patti நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகின்றன. நெட்பிளிக்ஸ் ரசிகர்களுக்கு Dont Move, Family Pack. Hijack 93 ஆகிய ஆங்கில படங்கள் வெளியாகின்றன. அதேபோல் Territory, Beauty In Black, The Pasta Queen, HellBound சீசன் 2, The Last Night At Tremore Beach (ஸ்பானிஷ்) வெப் சீரிஸ்கள் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகின்றன. அமேசான் ப்ரைம் ரசிகர்களுக்கு The Arctic Convoy, Nautilus, Like Dragon Yakuza ஆகிய படங்களும் வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ரிலீஸாகின்றன.
What's Your Reaction?