தமிழ்நாடு

ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி கையாடல்.. ஊழியரை அறையில் அடைத்து சித்ரவதை

ஏ.டி.எம். பணம் நிரப்பும் நிறுவனத்தில், ரூ.1 கோடியே 50 லட்சம் வரை கையாடல் செய்த ஊழியர்களை, நிறுவன மேலாளர்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி கையாடல்.. ஊழியரை அறையில் அடைத்து சித்ரவதை
கையாடல் செய்த ஊழியர்களை, நிறுவன மேலாளர்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை

சென்னை தி.நகர் கிரியப்பா சாலையில் சி.எம்.எஸ். லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் பணியை செய்து வருகிறது. பணத்தை பாதுகாத்து அதற்கான சாவி வைத்திருக்கும் பொறுப்பாளராக பிரபு என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் சிவா, நந்தா, சிவபெருமாள், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் கடந்த ஜூன் மாதம் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது ரூ.1.5 கோடி வரை கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நிறுவன அதிகாரிகள் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது பொறுப்பாளரான பிரபு தான் பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.

இதன் பிறகு கடந்த 19ஆம் தேதி பிரபு பணிக்கு வந்தபோது நிறுவன மேலாளர்கள் 9 பேர் சேர்ந்து பிரபுவை அறைத்து அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. கையாடல் செய்த பணத்தை கொடுக்கும்படி அடித்து உதைத்ததாக தெரிகிறது. பிரபுவை  அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று ரூ. 35 லட்சம் வரை பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், வங்கி லாக்கரில் இருந்த ரூ.85,00,000 பணத்தையும், 60 சவரன் நகையும் பறிமுதல் செய்தனர். இந்த நகைகளை பாரிமுனை பகுதியில் உள்ள அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்து ரூ.30 லட்சத்தை அவர்கள் வாங்கினர். மேலும் பிரபுவை அந்த நிறுவ ஊழியர்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக தி.நகர் காவல்துறை துணை ஆணையருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாண்டிஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபுவை மீட்டனர். மேலும் 10 ஊழியர்களை போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.