மதுரைக்காரங்க எப்பவுமே வேற லெவல்தான்... இந்திய அணியின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்!
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் நமது அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என முக்கிய நகரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
மதுரை: மதுரையில் ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் சார்பில் இந்திய அணியின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. 2007ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி கோப்பை வென்ற நிலையில் தற்போது ரோகித் சர்மா படை 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 176/7 ரன்கள் குவித்தது. பின்பு சவாலான இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 59 பந்தில் 76 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார்.
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட அரசியல், விளையாட்டு, சினிமா பிரபலங்கள் இந்திய அணிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
மேலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் நமது அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என முக்கிய நகரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
மதுரை கோவில்பாப்பாகுடி, ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள், வீரர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக இந்திய அணியின் வெற்றியை கொண்டாடினார்கள். மேலும், இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக, ஏ.ஆர்.சிட்டி கிளப் சார்பில் நட்புறவு கிரிக்கெட் போட்டியும் நடத்தபட்டது.
பின்னர் ஏ.ஆர்.சிட்டி கிளப் வீரர்கள் கிரிக்கெட் மைதானம், பேட்-ஸ்டம்ப், பந்து மற்றும் நீல நிற ஜெர்சி உடன் வித்தியாசமாக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டி தங்களுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
What's Your Reaction?