சட்டை கிழியாத சண்டையா?.. நீதிமன்ற வளாகத்திற்குள் மோதிக்கொண்ட வழக்கறிஞர்கள்...

Egmore Court Lawyers Attack : வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Jul 19, 2024 - 20:05
Jul 20, 2024 - 15:51
 0
சட்டை கிழியாத சண்டையா?.. நீதிமன்ற வளாகத்திற்குள் மோதிக்கொண்ட வழக்கறிஞர்கள்...
நீதிமன்ற வளாகத்திற்குள் மோதிக்கொண்ட வழக்கறிஞர்கள்

வழக்கறிஞர்கள் தங்களுக்குள்ளாகவே மாறி மாறி கைகள் மற்றும் நாற்காலிகளால் தாக்கிக் கொண்டதில் ஐந்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Egmore Court Lawyers Attack : உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களான சக்திவேல், செந்தில்நாதன் இருவரும், ஏற்கனவே நடத்தி வந்த வழக்கை, தற்போது வழக்கறிஞர் விஜயகுமார், விமல், தினேஷ் ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கு கை மாறிய விவகாரத்தில் விரோதம் ஏற்பட்ட நிலையில், மதியம் 01.15 மணியளவில், நீதிமன்ற வளாகத்தில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

அப்போது வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பினருக்கும் வழக்கறிஞர் விஜயகுமார், விமல் உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், வழக்கறிஞர்கள் விஜயகுமார் மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டதில் இரு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதில் 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாறி மாறி கைகளாலும் அங்கு இருந்த நாற்காலிகளாலும் அடித்துக் கொண்டுள்ளனர். மேலும், நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே, வழக்கறிஞர் தங்களது சட்டைகள் கிழியும் அளவுக்கு சண்டை போட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற எழும்பூர் உதவியாளர் தலைமையில், போலீசார் குவிக்கப்பட்டு சண்டையை தடுத்து நிறுத்தினர்.

இந்த தாக்குதலில் வழக்கறிஞர்கள் விஜய்குமார், விமல், உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்தவர்கள் ராயபேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடைக்கப்பட்ட இருக்கைகளை போலீசார் கைப்பற்றி கொண்டு சென்றனர். மேலும், சம்பவ இடத்தில் எழும்பூர் காவல் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow