Jay Shah: ஐசிசி தலைவராக ஜெய்ஷா தேர்வு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பாஜகவை சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெய்ஷா டிசம்பர் 1ம் தேதி முதல் ஐசிசி தலைவராக பதவியேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
35 வயதான ஜெய்ஷா இளம் வயதில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாஜகவை சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐசிசியின் தலைவராக தற்போது இருந்து வரும் கிரெக் பார்கிளேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிவடைய உள்ளது. இதனால் ஐசிசியின் புதிய தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜெய்ஷா ஐசிசி தலைவராக நியமனம் செய்யப்படலாம் என தகவல்கள் பரவி வந்தன. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஜெய்ஷா ஐசிசி தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்து இருந்தார்.
ஆனால் அவரை எதிர்த்து வேறு ஒருவரும் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யவில்லை. இதனால் ஜெய்ஷா
ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி தலைவர் ஜெய்ஷாவுக்கு இந்திய கிரி க்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?