அரசியல்

ஜம்மு காஷ்மீர் வெற்றி.. இந்தியா கூட்டணி வெற்றி.. அமைச்சர் பொன்முடி!

ஜம்மு காஷ்மீர் வெற்றி என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் வெற்றி.. இந்தியா கூட்டணி வெற்றி.. அமைச்சர் பொன்முடி!
ஜம்மு காஷ்மீர் வெற்றி.. இந்தியா கூட்டணி வெற்றி.. அமைச்சர் பொன்முடி!

சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் 2 நாள் வன அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வனத்துறையில் நடந்து வரும் பணிகள், முன்னேற்றம் குறித்து கோட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். பணிகள் உரிய காலத்தில் துரிதமாக செய்து முடிக்க அறிவுறுத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வனத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைக்கு வன அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வனத்துறையில் எந்த மாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தோம். வனத்துறை அதிகாரிகளுக்கு மற்றும் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். வனத்துறை சார்பாக ஆங்காங்கே மரங்கள் நட வேண்டும், புதிய நர்சரிகளை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளோம். 

வனத்துறையின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாநிலத்தின் வனப்பகுதி 33 சதவீதமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது ஆனால் தமிழகத்தின் வனப்பகுதியின் விழுக்காடு 23 ஆக உள்ளது. அதனால் அதனை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்குவது தொடர்பான ஆலோசனை பரிசீலனையில் உள்ளது. அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டி மலைப்பகுதியில் வன விலங்குகள் பாதுகாப்பு அமைக்க மக்களுக்கு எந்தவித தொல்லைகளும் வராமல் இருக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்” என்றார்.