இந்தியா கூட்டணி 'மாஸ்'.. 13 தொகுதிகளில் 10ல் வெற்றி.. பாஜக கோட்டையில் காங்கிரஸ் அபாரம்!

பீகார் மாநிலம் ரூபாலி தொகுதியில் நடந்த தேர்தலில் அனைவரும் அதிசயிக்கும்விதமாக சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,070 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பலம் வாய்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் கலாதர் பிரசாத் மண்டல் 59,824 வாக்குகளும், ராஷ்டீரிய ஜனதா தளத்தின் பீமா பாரதி 59,824 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.

Jul 13, 2024 - 17:47
Jul 13, 2024 - 18:33
 0
இந்தியா கூட்டணி 'மாஸ்'.. 13 தொகுதிகளில் 10ல் வெற்றி.. பாஜக கோட்டையில் காங்கிரஸ் அபாரம்!
Indi Alliance win by elections

கொல்கத்தா: தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. திமுக வேட்பாளராக போட்டியிட்ட அன்னியூர் சிவா 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல் மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் 3 தொகுதிகள், உத்தரகாண்ட்டில் 2 தொகுதிகள், பஞ்சாப், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 12 தொகுதிகளில் கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 12 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றன. 2 இடஙக்ளில் பாஜகவும், பீகாரில் சுயேச்சை வேட்பளாரும் வெற்றி பெற்றனர்.

அதாவது மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா மற்றும் மாணிக்தலா என 4 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். ராய்கஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ண கல்யாணி சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் மானஸ் குமார் கோஷை வீழ்த்தினார். 

காங்கிரஸ் ஆட்சி செய்யும் இமாச்சல பிரதேசத்தின் டெஹ்ரா தொகுதியில் முதலமைச்சர் சுக்விந்தர் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் 32,737 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஹோஷியர் சிங் 23,338 வாக்குகள் பெற்றார். இதேபோல் நலகர் தொகுதியில் காங்கிரசின் ஹர்தீப் சிங் பாவா  34, 608 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அதே வேளையில் இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பாஜகவின் ஆஷிஷ் ஷர்மா சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் மற்றும் மங்கலுர் என தொகுதிகளிலும் முறையே காங்கிரஸ் வேட்பாளர்கள் லகாபத் சிங் புடோலா, காசி முகமது நிஜாமுதீன் வெற்றிவாகை சூடினார்கள். பாஜக கோட்டை என கருதப்படும் உத்தரகாண்டில் அக்கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். 

பீகார் மாநிலம் ரூபாலி தொகுதியில் நடந்த தேர்தலில் அனைவரும் அதிசயிக்கும்விதமாக சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,070 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பலம் வாய்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் கலாதர் பிரசாத் மண்டல் 59,824 வாக்குகளும், ராஷ்டீரிய ஜனதா தளத்தின் பீமா பாரதி  59,824 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர். 

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மொஹிந்தர் பகத் 55,246 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜகவின் ஷீடல் அங்கூரல் 17,921 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
மத்திய பிரதேச மாநிலம் அமர்வாரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கமலேஷ் பிரதாப் ஷா  83,105 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரசின் திரன் ஷா சுக்ராம் தாஸ் 80,078 வாக்குகள் பெற்று நெருங்கி வந்து தோல்வி அடைந்தார்.

தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவின் வெற்றியையும் சேர்த்தால், இன்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான மொத்தம் 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow