அரசியல்

எதற்கெடுத்தாலும் மூத்த அமைச்சரா.? சொல்றதை கேளு..! கடுப்பான செல்லூர் ராஜு... வாங்கிக் கட்டிய செய்தியாளர்

“நீர்பிடிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருக்கு என்றால் அது முல்லை நகருக்கு மட்டுமல்ல, மதுரையில் உள்ள அனைத்து இடங்களுக்குமே பொருந்தும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

எதற்கெடுத்தாலும் மூத்த அமைச்சரா.? சொல்றதை கேளு..! கடுப்பான செல்லூர் ராஜு... வாங்கிக் கட்டிய செய்தியாளர்
எதற்கெடுத்தாலும் மூத்த அமைச்சரா.? சொல்றதை கேளு..! கடுப்பான செல்லூர் ராஜு... வாங்கிக் கட்டிய செய்தியாளர்

மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அப்போது அதிகாரிகளிடம் கடிந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பணிகள் ஏன் இவ்வளவு மந்தமாக நடைபெற்று வருகிறது என கேள்வி எழுப்பினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தொகுதி எம்எல்ஏ இப்பகுதிக்கு வருகிறாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்த தொகுதி எம்எல்ஏ ஆளுங்க கட்சியைச் சேர்ந்தவர். மாவட்ட செயலாளர் வெள்ள பாதிப்பின்போது வந்திருந்தார் அவரிடமும் கூறியிருந்தேன். இதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார். அதற்கு. ஒரு மூத்த அமைச்சராக நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற செய்தியாளர் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதில் ஆத்திரமடைந்த செல்லூர் ராஜு, என்ன அர்த்தம் இல்லாத கேள்வி கேட்கிற.? என செய்தியாளரை ஒருமையில் பேசி பதிலளித்தார். மேலும், “எதற்கெடுத்தாலும் மூத்த அமைச்சரா.? சொல்றதை கேளு..! மக்கள் குறை கூறுகிறார்கள் என சம்பந்தப்பட்ட ஆளும் கட்சி MLA-விடம்தான் கேட்க வேண்டும். எங்கிட்ட கேட்க கூடாது. அவர் பொதுமக்களை வந்து பார்த்திருந்தால் நான் ஏன் இங்கு ஆய்வு செய்ய வருகிறேன்?” எனக் கூறினார்.

இதையடுத்து திமுக எனும் ஆலமரத்தை வெட்ட சிலர் பிளேடுடன் வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான். ஆலமரத்தையே பிடுங்கிக் கொண்டு போயிருக்கு வெள்ளம். வெள்ளத்துல உலகமே அழிந்திருக்கிறது. இதெல்லாம் புதுசா? உதயநிதிக்கு தெரியல! எத்தனை கூட்டணி பலம் இருந்தாலும் மக்கள் பலம் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள்தான் எஜமானர்கள். அந்த மக்களுக்கு செய்யாமல் கூட்டணி பலத்தோடு மக்களை போய் சந்தித்தால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார். 

2026ல் கூட்டணி ஆட்சி அமையும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தது குறித்து பேசிய செல்லூர் ராஜு, “கூட்டணி குறித்து இப்போது எல்லாம் சொல்ல முடியாது. இதே பாட்டாளி மக்கள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பத்து நாளில் கூட்டணி மாறியது. கூட்டணி என்பது இப்போது பேசக்கூடிய தருணம் அல்ல. தோழமைக் கட்சி என்பது அந்த நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவு. தேர்தல் நேரத்தில் எந்தெந்த கட்சிகள் யாரோடு இருக்க வேண்டும் என்பது கொள்கை முடிவு அல்ல. இப்போது கூட்டணி பற்றி பேசுவது வேஸ்ட். கூட்டணி குறித்து யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசுவார்கள்” என்றார்.

நிர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மதுரை முல்லை நகர் பகுதி மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என கூறியுள்ளா. இதுகுறித்து பேசிய அவர், “முல்லை நகர் இன்று நேற்று உருவானது அல்ல. 60 ஆண்டுகளாக அப்பகுதியில் பொதுமக்கள் குடியிருந்த்து வருகிறார்கள். அப்பகுதிக்குள் தண்ணீர் போவதற்கு வழியில்லை. செயற்கையாக நம்முடைய அமைச்சர் தொகுதியில் இருந்து வெளியேறிய கழிவுநீரை முல்லை நகருக்கு திருப்பி விட்டார்கள். அதனால் தான் இந்த பாதிப்பு. எங்களது ஆட்சியில் ஒரே ஒருமுறை மட்டுமே தண்ணீர் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு நாங்கள் அதற்கான வழி வகையை செய்தோம். 

முறையாக பொதுப்பணித்துறை கால்வாய்கள், வடிநீர் வாய்க்கால்களை தூர்வாரி இருந்தால் முல்லை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் புகுந்திருக்காது. நீதி அரசர் கூறியுள்ளது முல்லை நகர் பகுதி மக்களை அகற்ற வேண்டும் அல்ல தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அனைத்து இடங்களையும். அப்படி என்றால் மதுரை மாநகராட்சி நீர் நிலையில்தான் உள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை நீர் நிலையில்தான் உள்ளது. எல்லா இடங்களும் குறிப்பாக சென்னையில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் நீர் பிடிப்பு பகுதியில் தான் உள்ளது இதையெல்லாம் எப்போது அகற்றுவது.?” எனக் கேள்வி எழுப்பினார்.