Duffedar Madhavi Transfer : லிப் ஸ்டிக் பூசியதால் டிரான்ஸ்ஃபர்!.. சென்னையின் முதல் பெண் டபேதார் மாதவி கதறல்
First Women Duffedar Madhavi Transfer in Chennai : அதிக லிப்ஸ்டிக் பூசி வந்ததால் தன்னை பணியிட மாற்றம் செய்தார்கள் என சென்னை மாநகராட்சியின் முதல் டபேதார் மாதவி குற்றம் சாட்டியுள்ளார்.
First Women Duffedar Madhavi Transfer in Chennai : சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக எஸ்.பி.மாதவி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெண் டபேதாராக பணிபுரிந்து வந்த மாதவிக்கு மேயரின் தனி உதவியாளர் சிவசங்கர் மெமோ அளித்துள்ளார். மாதவி பணிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை என இதற்கு காரணமாக கூறப்பட்டது.
தொடர்ந்து பணிக்கு காலதாமதமாக வருவதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாதவி(Duffedar Madhavi) தான் வேலைக்கு தாமதமாக வந்ததற்கான ஆதாரத்தை காட்டுமாறு தெரிவித்துள்ளார். உடனே ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி பணிக்கு 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்ததை ஆதாரமாக காட்டி உள்ளனர்.
ஆனால் அன்று தன் காலில் காயம் ஏற்பட்டதால் தான் காலதாமதமாக வந்ததாக தெரிவித்துள்ள மாதவிக்கு(Duffedar Madhavi), தற்போது வரை எதற்காக தான் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளோம் என தெரியவில்லை. மேலும் மாதவி பணிக்கு வரும்போது அதிக லிப்ஸ்டிக் பூசி வரக்கூடாது என்று அவருடைய உயர் அதிகாரி எச்சரித்ததாக தெரிகிறது.
மேலும், அலுவலகத்திற்கு வரும் மற்ற துறைகளை சார்ந்தவர்களுடன் மாதவி பேசவோ அல்லது சந்திக்கவோ கூடாது என அவர்கள் தெரிவித்ததாகவும் அதற்கும் அப்படி எதும் அரசாணை உள்ளதா என மாதவி கேள்வி கேட்டுள்ளார். இதை தொடர்ந்து டபேதார் மாதவி மணலி மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேயரின் தனி உதவியாளர் சிவசங்கர் தொடர்ந்து தன்னுடைய உதட்டுச் சாயத்தை குறைக்க சொல்வதும், பளபளப்பான புடவைகளையும் அணிந்திருப்பதாக குற்றம் சாட்டியதாகவும் மாதவி(Duffedar Madhavi) தெரிவித்துள்ளார். இந்தக் காரணத்தை வைத்தே தன்னை வேறு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாதவி தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் டபேதார் பதவி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. துணை மேயர் மற்றும் அவரது அலுவலகத்தில் உள்ள யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்பதே மேயர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கு மேயரின் கட்டளையாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஆணாதிக்க சிந்தனையில் ஒரு பெண் என்ன ஆடை அணிய வேண்டும், ஒரு பெண் என்ன நிற லிப்ஸ்டிக் பூச வேண்டும் என மேயரும், அவரது உதவியாளர்களும் நிர்பந்தித்தனரா என்ற சந்தேகத்தை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.
What's Your Reaction?