வீட்டுல விசேஷங்க... பேட் பிடித்த கையில், குழந்தையை சுமந்த சர்ஃப்ராஸ் கான்
ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கான்.
நடந்து முடிந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடிய இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கான், விராட் கோலியுடன் இணைந்து அற்புதமான பாட்னர்ஷிப் அமைத்தார். மேலும், தனது பங்கிற்கு 150 ரன்கள் அடுத்து அசத்தினார். இதனால், இந்திய அணி 406 ரன்கள் எடுத்தது.
அதேபோல் இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில், மும்பை அணிக்காக களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பை கைப்பற்றியது. இதற்கு முன்னதாக, 1997-98 ஆண்டில் மும்பை அணி கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக மும்பை அணி வீரர் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே, “என்னுடைய சிறுவயது கனவை நிறைவேற்றியதுடன், எனது நாட்டிற்காக சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று சர்ஃப்ராஸ் கான் தெரிவித்திருந்தார். மேலும், சச்சின் டெண்டுல்கர், இயன் பிஷப், வி.வி.எஸ்.லக்ஷ்மணன் உள்ளிட்ட பலரும் சர்ஃப்ராஸ் கானைப் புகழ்ந்து பேசி இருந்தார்கள்.
இந்த சாதனைகளுக்கும் புகழ் மொழிக்கும் மத்தியில் சர்ஃப்ராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சமூக வலைத்தளமான தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சர்ஃப்ராஸ் கான். அதில், தனது குழந்தையை கையில் சுமந்தபடி இருக்கும் புகைப்படத்தையும், தந்தையுடனும் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
What's Your Reaction?