‘விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன்'.. போலீஸ் கஸ்டடியில் மகா விஷ்ணு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sep 11, 2024 - 23:45
Sep 11, 2024 - 23:52
 0
‘விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன்'.. போலீஸ் கஸ்டடியில் மகா விஷ்ணு
மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் - நீதிமன்றம் உத்தரவு

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்ஜென்மம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அப்போது, முன் ஜென்மத்தில் தவறுகள், பாவங்கள் செய்ததால் தான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.

அப்போது அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர், மகா விஷ்ணுவின் கருத்து தவறு என எதிர்ப்புத் தெரிவித்தார். அதனையடுத்து மகா விஷ்ணுவுக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மகாவிஷ்ணு கடந்த 8ஆம் தேதி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மகா விஷ்ணுவிற்கு 20.09.2024 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கைது செய்யப்பட்ட மகா விஷ்ணுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்களை தெரிவித்துள்ளார். 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள நிலையில், சித்தர்கள் ஆசீர்வாதத்தால் சொற்பொழிவுகள் வழங்கும் தனது தனது யூடியூப் சேனலை, 5 லட்சம் ஃபாலோவர்கள் பின் தொடர்வதாகவும், பரம்பொருள் பவுண்டேஷன் மூலமாக பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகவும், 5 நாடுகளில் இதுபோன்ற சொற்பொழிவு ஆற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், கடந்த திங்கட்கிழமை [09-09-24] அன்று மாற்று திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகா விஷ்ணுவை, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் 7 நாட்கள் விசாரிக்க அனுமதி கோரி இருந்தனர்.

இதனையடுத்து, மகா விஷ்ணு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, மகா விஷ்ணு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றார். மேலும், காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்த நிலையில், மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow